Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

குளக்கரைக் கல்வெட்டு

Lakeside Inscription

அமைவிடம்

உப்புக்கோட்டையின் மேற்குப் பக்கம் ரொம்பச்சி அம்மன் குளக்கரையில்


மொழியும் எழுத்தும்

தமிழ், வட்டெழுத்து.


காலம் / அரசன்

முதலாம் வரகுண பாண்டியன்


ஊர்

உப்புக்கோட்டை

மாவட்டம்

தேனி

வரலாற்று ஆண்டு
பொது ஆண்டு 8-9ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
ஒரு பலகைக் கல்லின் இரண்டு பக்கமும், பொது ஆண்டு 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. கல்வெட்டின் முன்பகுதியில், முதலாம் வரகுண பாண்டியன் காலத்தில் அயநாட்டுத் திருவடிப் புத்தூர் ஆழ்வாருக்கு, நாள்தோறும் விளக்கு எரிப்பதற்காக அடிப்பொடி குழவன் என்பவன் 25 சாவா மூவாப் பேராடுகளைக் கொடை அளித்துள்ளான் என்ற செய்தி காணப்படுகிறது. இவ்வாடுகள் மூலம் கிடைக்கக்கூடிய வருமானத்தைக் கொண்டு நாள்தோறும் விளக்கு எரிக்கும் பணியைப் பத்தமலை வீரர்கள் செய்து வந்துள்ளனர். இந்த தர்மத்தைப் பல்லாயிரம் என்னும் குழுவினர் பாதுகாத்து வந்துள்ளனர் என்ற செய்தியையும் கூறுகிறது.

இக்கல்வெட்டின் பின்புறம் அயநாட்டுத் திருவடிப்புத்தூர் ஈஸ்வரன் கோயிலுக்கு நாள்தோறும் விளக்கு எரிப்பதற்காக வடுவூரான் வருத்தி ரவி இயக்கர் என்பவர் 100 சாவா மூவாப் பேராடுகளைக் கொடை அளித்துள்ளார் என்றும், இதைத் தனியன் முட்டை என்பவன் பாதுகாத்து வந்துள்ளான் என்ற செய்தியும் வெட்டப்பட்டிருக்கிறது.
தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

புகைப்படங்கள்

ப.பிரதீப்

ப.பிரதீப்