Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

செக்கு கல்வெட்டு

Oil Press Inscription

அமைவிடம்

சுந்தரராஜபுரம் நாகலாறு ஓடையில் தனிப் பாறையில் (செக்கு)


மொழியும் எழுத்தும்

தமிழ்


வரலாற்று ஆண்டு

பொது ஆண்டு 9 - 10ஆம் நூற்றாண்டு


ஊர்

சுந்தரராஜபுரம்

மாவட்டம்

தேனி

கூடுதல் விவரங்கள்
நாகலாறு ஓடையில் உள்ள பாறையில் வெட்டப்பட்ட செக்கு ஒன்றில் இரண்டு வரிகள் கொண்ட கல்வெட்டு காணப்படுகிறது. அக்கல்வெட்டில் வெட்டப்பட்டுள்ள செய்தி:

1.தெந்முட்ட நாட்டுக் கண்ணி மங்கலத்துக் குடியான் சேவடி

2. இடுவிச்ச செக்கு

இக்கல்வெட்டின் படி கண்ணிமங்கலத்தைச் சேர்ந்த குடியான் சேவடி என்பவர் ஆண்டிபட்டி அருகே உள்ள நாகலாற்றுப் பகுதியில் இச்செக்கைச் செய்துகொடுத்துள்ளார் என்ற செய்தியை அறிய முடிகிறது. எழுத்தமைதியின் அடிப்படையில் இக்கல்வெட்டின் காலம் பொது ஆண்டு 9 - 10 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. சுமார் 15 அடி நீளம், 3அடி உயரம், 7 அடி அகலத்தில் அமைந்துள்ள திறந்த வெளிப்பாறையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செக்கில், அமைந்துள்ள கற்குழி 25 இன்ச் வெளி விட்டமும், 10 இன்ச் உள் விட்டமும் கொண்டுள்ளது.

தெந்முட்ட நாடு என்பது தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கணவாய் பகுதிக்கு கிழக்கே உள்ள மல்லப்புரம், சூலப்புரம், மேலத்திருமாணிக்கம், எழுமலையில் தொடங்கி பெருங்காமநல்லூர் வரையிலான இடங்கள் ஆகும். அந்த காலங்களில் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ளும் பயணிகள், துறவிகள், வணிகர்கள், நடமாடும் கலைக் கூத்தாடிகள் உள்ளிட்டோர் வழிப் பயணத்திலேயே தங்க நேரிடும்போது அவர்கள் சமைப்பதற்காக நீர்நிலைகளுக்கு அருகேயுள்ள பாறைகளில் உணவுப் பொருட்களை அரைப்பதற்கு ஏதுவாக கற்களில் செக்கு உருவாக்குவது வழக்கம். அதன்படி மதுரையிலிருந்து சதுரகிரி மகாலிங்கம் கோயில், மாவூற்று வேலப்பர் கோயில், பெரியகுளம் பாலசுப்ரமணியர் கோயில், சின்னமனூர் சிவகாமியம்மன் கோயில் போன்ற வழிபாட்டுதலங்களுக்கு செல்பவர்களுக்கு உணவு தயார் செய்து வழங்க சேவடி கூட்டம் என்ற குழுவினர் இருந்துள்ளனர். இது அவர்கள் உருவாக்கிய கற்செக்காக இருக்கக் கூடும். சேவடி என்பது இறை அடியவர்கள் அல்லது இறைத்தொண்டை குறிப்பதாகும்.
தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

புகைப்படங்கள்

ப.பிரதீப்

ப.பிரதீப்

ப.பிரதீப்