Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

கோயில் கல்வெட்டுகள்

Temple Inscriptions

அமைவிடம்

குலசேகரபெருமாள் கோயில் அதிட்டானம் மற்றும் சுவர்


மொழியும் எழுத்தும்

தமிழ், கிரந்த எழுதுக்கள்


காலம் / அரசன்

கல்வெட்டு 1. சோழநாடு கொண்டருளிய மாறவர்மன் சுந்தர பாண்டியன்

கல்வெட்டு 2. மாறவர்மன் சுந்தர பாண்டியன்


ஊர்

கள்ளிக்குடி

மாவட்டம்

மதுரை

ஆட்சி ஆண்டு
1 ஆம் கல்வெட்டு - 18 ஆவது ஆண்டு

2 ஆம் கல்வெட்டு - 20 ஆவது ஆண்டு
வரலாற்று ஆண்டு
1ஆம் கல்வெட்டு - பொது ஆண்டு 13 ஆம் நூற்றாண்டு

2ஆம் கல்வெட்டு - பொது ஆண்டு 13 ஆம் நூற்றாண்டு

3ஆம் கல்வெட்டு - பொது ஆண்டு 17-18 ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
1 ஆம் கல்வெட்டு - குலசேகரபெருமாள் கோயில் அதிட்டானத்தில் துண்டுகளாக உள்ள இக்கல்வெட்டு, சேர்த்துப் படிக்கப்பட்டுள்ளது. கள்ளிக்குடி என்றழைக்கப்படும் இவ்வூரின் பெரியகுளமான விக்கிரமபாண்டிய பேரேரி நிலங்கள் கரை வகை செய்தமை குறிக்கப்படுகிறது. குமரநாராயணப் பேரேரி, இராசசிங்க பேரேரி, நற்சானியான கோவிந்தப் பேரேரி, நற்சானி வாய்க்கால் ஆகியவை குறிக்கப்படுகின்றன. கரையறுதி என்பது நீர்ப்பாசன மற்றும் உழவு நெறிமுறையாகத் தெரிகிறது.

2 ஆம் கல்வெட்டு - குலசேகரபெருமாள் கோயில் அதிட்டானத்தில் உள்ள துண்டுக்கல்வெட்டுகளில், முதல் 6 துண்டுகள் ஒரே வகை எழுத்தமைதியிலும் 7ஆவது துண்டு வேறு எழுத்தமைதியிலும் உள்ளன. இக்கல்வெட்டுகளில் அழகர், புரவரி எம்பெருமான் ஆகிய தெய்வங்களின் திருவிடையாட்ட நிலங்கள் குறிக்கப்படுகின்றன. மேலும் இக்கல்வெட்டு பொற்பாதேவி சதுர்வேதி மங்கலத்து சபை சார்ந்த பண்ணை செய்வார், வேலி செய்வார் ஆகியோர் நீர்ப்பாசன நெறிமுறை செய்ததைக் குறிப்பதாகத் தெரிகிறது. இக்கோவிலைச் சீரமைக்கும் பணியின் போது கண்டெடுக்கப்பட்டுப் பெரும்பாலும் தவறான வரிசையில் வைக்கப்பட்ட இக்கல்வெட்டுகளைத் தவிரக் கிராமத்தில் பதிவுசெய்யப்பட்ட வரலாறு மிகக் குறைவு.

3 ஆம் கல்வெட்டு - மீனாட்சியம்மனுக்கு அறக்கட்டளையாக விட்டிலப்பர் பெயரில் சத்திரம் அமைக்கப்பட்டதை இக்கல்வெட்டு கூறுகிறது.

சுமார் 700 ஆண்டுகள் பழைமையான குலசேகரப் பெருமாள் கோயிலில் கருவறை மற்றும் மகாமண்டபம் உள்ளது. இயற்கையின் மாறுபாடுகள் மற்றும் மனித புறக்கணிப்பின் காரணமாக மண்டபத்தின் கூரை சேதமடைந்துள்ளது. கிராமவாசிகளின் கூற்றுப்படி, கருவறைக்குள் காணப்படும் விஷ்ணு, பூதேவி மற்றும் ஸ்ரீ தேவி சிலைகள் பின்னர் சேர்க்கப்பட்டுள்ளன. விஷ்ணு பகவான் ஸ்ரீதேவியுடன் உள்ள மூலச் சிலைகள் திறந்த மண்டபத்தில் பராமரிக்கப்படாமல் விடப்பட்டுள்ளன. அங்குள்ள அரச மரத்தின் வேர்கள் சுவரில் ஆழமாகப் புகுந்து கோயிலை மேலும் சேதப்படுத்தியுள்ளன. வலப்பக்கச் சுவரில் உள்ள 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளின் அடிப்படையில், கிராமத்தின் முற்காலப் பெயர் 'பொற்பாதேவி சதுர்வேதி மங்கலம்’ எனத் தெரிகிறது.

இக்கோயில் ‘புறவு வரி விண்ணகர்’ என்ற பெயரால் அழைக்கப்படுவதை வைத்துப் பார்த்தால், வருவாய்த்துறை அதிகாரிகள் இக்கோயிலைக் கட்டியிருக்கலாம் எனத் தோன்றுகிறது.
தகவல்

முனைவர் ஆத்மநாதன்

குறிப்புகள்
இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கையில் எண் 261-264, 1963-64 ஆம் ஆண்டு இக்கல்வெட்டு பற்றிய செய்தி வெளிவந்துள்ளது. மதுரை மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி 2; பக்கம் 116-119.
புகைப்படங்கள்

முனைவர் சிந்தன் மற்றும் முனைவர் கண்ணன்

முனைவர் சிந்தன் மற்றும் முனைவர் கண்ணன்

முனைவர் சிந்தன் மற்றும் முனைவர் கண்ணன்

முனைவர் சிந்தன் மற்றும் முனைவர் கண்ணன்

முனைவர் சிந்தன் மற்றும் முனைவர் கண்ணன்

முனைவர் சிந்தன் மற்றும் முனைவர் கண்ணன்

முனைவர் சிந்தன் மற்றும் முனைவர் கண்ணன்

முனைவர் சிந்தன் மற்றும் முனைவர் கண்ணன்

முனைவர் சிந்தன் மற்றும் முனைவர் கண்ணன்

முனைவர் சிந்தன் மற்றும் முனைவர் கண்ணன்

முனைவர் சிந்தன் மற்றும் முனைவர் கண்ணன்

முனைவர் சிந்தன் மற்றும் முனைவர் கண்ணன்

முனைவர் சிந்தன் மற்றும் முனைவர் கண்ணன்

முனைவர் சிந்தன் மற்றும் முனைவர் கண்ணன்

முனைவர் சிந்தன் மற்றும் முனைவர் கண்ணன்

முனைவர் சிந்தன் மற்றும் முனைவர் கண்ணன்

முனைவர் சிந்தன் மற்றும் முனைவர் கண்ணன்

முனைவர் சிந்தன் மற்றும் முனைவர் கண்ணன்

முனைவர் சிந்தன் மற்றும் முனைவர் கண்ணன்

முனைவர் சிந்தன் மற்றும் முனைவர் கண்ணன்

முனைவர் சிந்தன் மற்றும் முனைவர் கண்ணன்

முனைவர் சிந்தன் மற்றும் முனைவர் கண்ணன்

முனைவர் சிந்தன் மற்றும் முனைவர் கண்ணன்

முனைவர் சிந்தன் மற்றும் முனைவர் கண்ணன்

முனைவர் சிந்தன் மற்றும் முனைவர் கண்ணன்

முனைவர் சிந்தன் மற்றும் முனைவர் கண்ணன்

முனைவர் சிந்தன் மற்றும் முனைவர் கண்ணன்