Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

கோயில் கல்வெட்டுக்கள்

Temple Inscriptions

அமைவிடம்

காமாட்சியம்மன் கோயில் தெற்கு, வடக்கு மற்றும் மேற்குச் சுவர்கள்


மொழியும் எழுத்தும்

தமிழ்


காலம் / அரசன்

பாண்டியர்


ஊர்

கொக்குலாஞ்சேரி

மாவட்டம்

மதுரை

வரலாற்று ஆண்டு
பொது ஆண்டு 13ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
காமாட்சியம்மன் கோவிலின் வடக்கு, மேற்கு மற்றும் தெற்குச் சுவர்களில் காணப்படும் துண்டுக் கல்வெட்டுக்கள், இக்கோவிலுக்கு வழங்கப்பட்ட நில தானங்களைப் பற்றிய ஆவணங்களின் பகுதிகளாக உள்ளன. அவை பின்வருமாறு:

1 ஆம் கல்வெட்டு - இக்கல்வெட்டில் கானக்குடி, அழகிய பாண்டிய நல்லூர், கற்குறிச்சி, பூங்கானாட்டு அந்தனகுடி ஆகிய ஊர்ப்பெயர்களும், வடமன்னியேரி என்ற ஏரியின் பெயரும், வீரப் பேரையன், திவாகரனான குருகுலராஜன் ஆகிய நபர் பெயர்களும் காணப்படுகின்றன.

2 ஆம் கல்வெட்டு - இந்த துண்டுக் கல்வெட்டுகள், விக்கிரம பாண்டிய ஈசுவரத்திற்குத் திருப்படி மாற்றுள்ளிட்டு வேண்டும் நிவந்தங்களுக்குத் தேவதான இறையிலியாக நிலம் வழங்கப்பட்டிருந்தமையைத் தெரிவிக்கிறது.

3 ஆம் கல்வெட்டு - இந்த துண்டுக் கல்வெட்டுகள், கோயிலுக்கு வழங்கப்பட்ட நிலத்தின் எல்லைகள் குறித்தும், அதற்கு விதிக்கப்பட்ட வரிகள் குறித்தும் குறிப்பிடுகின்றன. இவற்றில் பள்ளிச்சந்தம் (சமண மடங்களுக்கு அளிக்கப்பட்ட நில தானம்) பற்றிய குறிப்பும் காணப்படுகிறது.

4 ஆம் கல்வெட்டு - பூங்கானாட்டுப் பகுதியிலிருந்த விண்ணகரம் (விஷ்ணு ஆலயம்) ஒன்றிற்கும், சிவாலயம் ஒன்றிற்கும் வழங்கப்பட்டிருந்த நில தானங்களைப் பற்றிய ஆவணங்களின் பகுதிகளாக இக்கல்வெட்டுகள் தெரிகின்றது.

5 ஆம் கல்வெட்டு - செங்குடி நாட்டுப் புளியங்குடி, பூங்கானாட்டு அந்தனகுடி போன்ற ஊர்களில் இருந்த கோயில் நிலங்களின் ஆவணப் பகுதிகளாக இத்துண்டுக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இக்கல்வெட்டில் எள், வரகு, தினை போன்ற பயிர்களும் கருஞ்செய், புன்செய், நீர்நிலம், தோட்டம், நத்தம் எனப் பலவகைப்பட்ட நிலங்களும் குறிக்கப்பட்டுள்ளன. கோயில் நிவந்தங்களுக்காக வேண்டி இந்நிலங்கள் வாங்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் பள்ளிச்சந்தம் இருந்தமைக்கான குறிப்பும் உள்ளது.
தகவல்

முனைவர் ஆத்மநாதன்

குறிப்புகள்
மதுரை மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி 2; பக்கம் 132-141. இக்கல்வெட்டு நடுவண் அரசு தொல்லியல் துறையின் கல்வெட்டு ஆண்டறிக்கையில் 351 353 /1961-62 -இல் வெளியிடப்பட்டுள்ளது
புகைப்படங்கள்

முனைவர் ஆத்மநாதன்

முனைவர் ஆத்மநாதன்

முனைவர் ஆத்மநாதன்

முனைவர் ஆத்மநாதன்

முனைவர் ஆத்மநாதன்

முனைவர் ஆத்மநாதன்

முனைவர் ஆத்மநாதன்

முனைவர் ஆத்மநாதன்

முனைவர் ஆத்மநாதன்

முனைவர் ஆத்மநாதன்

முனைவர் ஆத்மநாதன்

முனைவர் ஆத்மநாதன்

முனைவர் ஆத்மநாதன்

முனைவர் ஆத்மநாதன்

முனைவர் ஆத்மநாதன்

முனைவர் ஆத்மநாதன்

முனைவர் ஆத்மநாதன்

முனைவர் ஆத்மநாதன்

முனைவர் ஆத்மநாதன்

முனைவர் ஆத்மநாதன்

முனைவர் ஆத்மநாதன்