Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

கோயில் மண்டபக் கல்வெட்டுக்கள்

Temple Mandapa Inscriptions

அமைவிடம்

அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயிலில் உள்ள ஆயிரவர் காசுக்கார செட்டியார் மண்டபக் கல்வெட்டு


மொழியும் எழுத்தும்

தமிழ்


வரலாற்று ஆண்டு

பொது ஆண்டு 1848


ஊர்

திருப்பரங்குன்றம்

மாவட்டம்

மதுரை

கூடுதல் விவரங்கள்
திருப்பரங்குன்றம் ஆயிரவர் காசுக்கார செட்டியார் மண்டபம் மற்றும் மடப்பள்ளி கட்டியதைப் பற்றிய கல்வெட்டு இது.

1. உ சாலியவாகன சகாற்ததம் சூஎளஎய ற்மேல் செல்லா நின்ற விரோதிகிருது வருசம் அற்பிசி மாதம் உயஉ உ ஆண்டவர் சுப்பிரமணியசுவா

2. மிக்கி தற்மசிவ ஆசாரியாற் சிஷ்யர்கள் மூன்றாஞ்சாதி வழியாக ஆயிரவர்கள் உபையமாக பூர்வீகமாய் ஒடுக்க மென்றும்

3. காப்பு அறையென்றும் நாமகரணம் உண்டாகி உச்சிகாலகட்டளை நடந்து வருகிறதில் முன் சகாற்த்தம் சூளைருயரு சரியான ஆனந்தவரு

4. த்தில் மருத நாயக ஞானியார் நாளையில் தென்புறம் ரெட்டை பத்தி மண்டபம் கட்டினது தாண்டவ ஞானியார் நாளையில் மேல் புறம் ரெட்டைப்ப

5. த்தியில் மண்டபமிங்…. கட்டினது ஆறுமுகம் செட்டி விசாரணையில் கீழ்புறம் மடப்புளிலாந்தினது இப்போது தாண்டவ ஞானியார் நாளையில்

6. ஆயிறவர்கள் உபையமாக வடபுறமண்டபம் பத்தி மூணுக்கு இருபத்து நாளு அங்கணங்கட்டி முடிவாகின நாளது தேதியில் மண்

7. டபம் பிறதிட்டை செய்து நாளது தேதி யரு உகந்த சஷ்யில் சுவாமி யெழுந்தருளச் செய்து. மருதனயக ஞானியார் நாளை

8. யில் கட்டியிருந்த வாசல் ரெட்டைப் பத்தியை நாளதுவருசத்தில் பிரித்து ஒசத்திகட்டினதுயிசானிய மூலையில் மடப்புளியுங்கட்டினது

9. கணடவருக்கு ஆயிறவற்களுக்கு வேலைக்காறருக யிருந்து விசாறணை பார்த்து சுப்பன் செட்டி தவுடன் செட்டி.
தகவல்

முனைவர் ஆத்மநாதன்

புகைப்படங்கள்

திரு. உதயகுமார் மற்றும் திரு. முத்துப்பாண்டி

திரு. உதயகுமார் மற்றும் திரு. முத்துப்பாண்டி

திரு. உதயகுமார் மற்றும் திரு. முத்துப்பாண்டி

திரு. உதயகுமார் மற்றும் திரு. முத்துப்பாண்டி

திரு. உதயகுமார் மற்றும் திரு. முத்துப்பாண்டி

திரு. உதயகுமார் மற்றும் திரு. முத்துப்பாண்டி

திரு. உதயகுமார் மற்றும் திரு. முத்துப்பாண்டி