Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

கோயில் கல்வெட்டுகள்

Temple Inscriptions

அமைவிடம்

காளைநாத சுவாமி கோயில்


மொழியும் எழுத்தும்

தமிழ், வட்டெழுத்து


காலம் / அரசன்

முற்காலப் பாண்டியர்கள்,

2 & 3 ஆம் கல்வெட்டுகள் - மாறன்சடையன்

4 ஆம் கல்வெட்டு - சடையன்மாறன்

5,6,7,8,9&10 ஆம் கல்வெட்டுகள் -சோழன்தலைகொண்ட வீரபாண்டியன்


ஊர்

பள்ளிமடம்

மாவட்டம்

விருதுநகர்

ஆட்சி ஆண்டு
1 ஆம் கல்வெட்டு - 26 ஆவது ஆண்டு

3 ஆம் கல்வெட்டு - 41 ஆவது ஆண்டு

4 ஆம் கல்வெட்டு - 2 ஆவது ஆண்டு

5 ஆம் கல்வெட்டு - 7 ஆவது ஆண்டு

6 ஆம் கல்வெட்டு - 8 ஆவது ஆண்டு

7 ஆம் கல்வெட்டு - 9 ஆவது ஆண்டு

8 ஆம் கல்வெட்டு - 9 ஆவது ஆண்டு

9 ஆம் கல்வெட்டு - 11ஆவது ஆண்டு

10 ஆம் கல்வெட்டு - 12ஆவது ஆண்டு
வரலாற்று ஆண்டு
பொது ஆண்டு 8 முதல் 10ஆம் நூற்றாண்டு வரை
கூடுதல் விவரங்கள்
முற்காலப் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த காளநாத (காளைநாத) சுவாமி கோவிலில் 10 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கல்வெட்டுகளில் இக்கோயில் ’திருச்சுழியல் பள்ளிப்படை' என்றும் அழைக்கப்படுகிறது. இக்கல்வெட்டுகளில் கூறப்பட்ட செய்திகள்:

கல்வெட்டு 1) குறண்டி திருக்காட்டுப்பள்ளி என்ற ஒரு சமணப் பள்ளிக்கு ஆளவ்வுகோன் காளி பெற்றமும் அவனது மகள் அப்பி சிங்கமும் அளித்த கொடையைக் கூறுகிறது.

கல்வெட்டு 2) வெண்புநாட்டுக் குறண்டியிலுள்ள சமணப்பள்ளிக்குக் குறண்டியைச் சார்ந்த சாத்தங்காரி திருநந்தாவிளக்கு எரிப்பதற்காக 50 ஆடுகள் அளித்ததைத் தெரிவிக்கிறது. இதற்குக் காவலாக ஊராரும் கணத்தாரும் இருந்தனர். மற்றொரு கல்வெட்டு திருக்காட்டாம்பள்ளிக்குத் திருநந்தாவிளக்கு எரிப்பதற்காகப் பூவணவன் என்பவன் 75 ஆடுகள் அளித்துள்ளதைக் கூறுகிறது. இக்கல்வெட்டில் குறண்டியில் இருந்த பெண் துறவியிரான குறண்டிக் கன்னிமார் குறிப்பிடப்படுகின்றனர்.

கல்வெட்டு 3) வெண்புநாட்டுக் குறண்டியில் இருந்த திருக்காட்டாம்பள்ளி என்றழைக்கப்பட்ட சமணப்பள்ளியில் திருவிளக்கு எரிப்பதற்காகத் திங்கள்தோறும் 5 நாழி நெல் அளப்பதற்கு 50 ஆடுகள் அளித்ததைத் தெரிவிக்கிறது. ஒலத்தூரைச் சார்ந்த பாம்பாரூரைச் சேர்ந்தவன் இத்தானத்தை அளித்துள்ளான்.

கல்வெட்டு 4) பருத்திக்குடி நாட்டுத் தேவதானம் திருச்சுழியல் சுந்தரபாண்டிய ஈசுவரத்து இறைவனுக்கு அளற்று நாட்டுக் கலிசல்மங்கலத்து தச்சன்.. ன் உலகன் என்பவன் விளக்கு எரிப்பதற்காக 25 ஆடுகள் அளித்ததைக் கூறுகிறது.

கல்வெட்டு 5) பருத்திக்குடி நாட்டுத் தேவதானம் திருச்சுழியல் பள்ளிப்படை சுந்தரபாண்டிய ஈஸ்வரத்துப் படாரர்க்குப் பொழியூர் நாட்டுப் பொழியூர்ச் சோளாந்தகப் பல்லவரையனாயின மானாதிச்சன் என்பவன் திருநந்தாவிளக்கு எரிப்பதற்காக 75 ஆடுகள் தானமாக அளித்தான். சோளாந்தக நாராயம் என்ற அளவையினால் இதற்காக உழக்காழாக்கு நெல் அளிக்கப்பட்டது.

கல்வெட்டு 6) சுந்தரபாண்டிய ஈஸ்வரத்துத் தேவர்க்குத் திருநந்தாவிளக்கு ஒன்று எரிப்பதற்காக 50 ஆடுகளைக் கிழவன் அருளாழி என்பவன் தன் மகன் கண்டன் தேவன் என்பவனைச் சார்த்தித் தானமாகத் தந்ததை இக்கல்வெட்டு கூறுகிறது.

கல்வெட்டு 7) சுந்தரபாண்டிய ஈஸ்வரத்துத் தேவர்க்குத் திருநந்தாவிளக்கு எரிப்பதற்காகக் கொடுக்கப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட ஆடுகளைப் பெற்ற இடையர்களின் பெயர்கள் இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு இடையரும் எவ்வளவு ஆடுகள் பெற்றனர் என்ற செய்தியும் இதில் கூறப்படுகிறது.

கல்வெட்டு 8) திருச்சுழியல் பள்ளிப்படை சுந்தரபாண்டிய ஈஸ்வரம் என்றழைக்கப்பட்ட சிவன்கோவிலில் பணிபுரிந்த தேவரடியாரின் வழியினர் இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகின்றனர்.

கல்வெட்டு 9) திருச்சுழியல் பள்ளிப்படை சுந்தரபாண்டிய ஈஸ்வரம் என்ற கோவிலைச் சார்ந்து மகாவிரதிகள் என்ற சைவமடம் ஒன்று இருந்தது. இம்மடத்தில் விளக்கு எரிப்பதற்காக 20 ஆடுகள் தானமாக அளிக்கப்பட்டதை இக்கல்வெட்டு கூறுகிறது.

கல்வெட்டு 10) பொழியூர் நாட்டு சூடுவூர் மூவேந்த வேளானாயின அரங்கம் பூதி என்பவரால் திருநந்தாவிளக்கு இரண்டு எரிப்பதற்காக 100 ஆடுகள் தானமாகத் தரப்பட்டன.
தகவல்

முனைவர் செல்லப்பாண்டியன்

குறிப்புகள்
விருதுநகர்_மாவட்டக்_கல்வெட்டுகள்_தொகுதி_1
புகைப்படங்கள்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

காணொலி

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.