Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

கோயில் கல்வெட்டுகள்

Temple Inscriptions

அமைவிடம்

கைலாசநாதர் கோயில்


மொழியும் எழுத்தும்

தமிழ்


காலம் / அரசன்

பிற்காலப் பாண்டியர் காலம்


ஊர்

பாலவநத்தம்

மாவட்டம்

விருதுநகர்

வரலாற்று ஆண்டு
பொது ஆண்டு 13ஆம் நூற்றாண்டு முதல் 20ஆம் நூற்றாண்டு வரை
கூடுதல் விவரங்கள்
கைலாசநாதர் அல்லது கைலாசமுடையார் கோவிலின் கருவறைச் சுவர்கள், அதிட்டானம் மற்றும் முன் மண்டபத்தூண் உள்ளிட்ட 7 இடங்களில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இக்கல்வெட்டுகளில் கூறப்பட்ட செய்திகள்:

கல்வெட்டு 1) இவை சிவன் கோவிலுக்கு அளிக்கப்பட்ட கொடைகளைப் பற்றிக் கூறும் சிதைவுற்ற கல்வெட்டுகளாகும். இதில் அதிகாரிகள் பெயரும், பூங்கான நாடும் குறிப்பிடப்படுகின்றன.

கல்வெட்டு 2) அரியபெருமாள் என்பவரின் பெயரை மட்டும் குறிப்பிடும் கல்வெட்டு இது. இவர் இக்கோவிலில் அறப்பணி ஒன்றைச் செய்தவராக இருக்கலாம்.

கல்வெட்டு 3) பிற்காலப் பாண்டிய மன்னன் மெய்க்கீர்த்தியைக் கொண்ட சிதைவுற்ற கல்வெட்டாகும்.

கல்வெட்டு 4) மாறவர்மன் சுந்தரபாண்டியனின் மெய்க்கீர்த்திப் பகுதி மட்டுமே உள்ளது.

கல்வெட்டு 5) துண்டுக் கல்வெட்டு. இறையிலியாக நிலமளிக்கப்பட்டதைத் தெரிவிக்கிறது.

கல்வெட்டு 6)பூங்கான நாட்டுக் காஞ்சி கயிலாசநாதர் கோயில் இறைவனுக்கு அளிக்கப்பட்ட கொடைகளைப் பற்றித் இத்துண்டுக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. திருநந்தா விளக்கு எரிப்பதற்காக ஒரு செக்கு அளிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் பல பாண்டிய அலுவலர்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன.

கல்வெட்டு 7) வாணியக்குட்டி செட்டி அவரது மகள்கள் ஆனந்தவல்லியும் அழகும் இக்கல்வெட்டுள்ள மண்டபத்தைக் கட்டியதைத் தெரிவிக்கிறது.
தகவல்

முனைவர் செல்லப்பாண்டியன்

குறிப்புகள்
விருதுநகர்_மாவட்டக்_கல்வெட்டுகள்_தொகுதி_1 பக்கம் 67, 68
புகைப்படங்கள்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.