Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

கண்மாய்க் கல்வெட்டு

Irrigation Tank Inscription

அமைவிடம்

வடக்குநத்தம் காட்டுப்பகுதி (நீர் வடிகால் பகுதி)


மொழியும் எழுத்தும்

தமிழ்


காலம் / அரசன்

13ஆம் நூற்றாண்டு / மாறவர்மன் குலசேகரபாண்டியன்


ஊர்

வடக்குநத்தம்

மாவட்டம்

விருதுநகர்

வரலாற்று ஆண்டு
பொது ஆண்டு 1268 - 1311
கூடுதல் விவரங்கள்
இந்தக் கல்வெட்டானது இவ்வூரிலுள்ள கண்மாயிலிருந்து நீர் வெளியேறக்கூடிய கலிங்குப் பகுதியில் காணப்படுகிறது. இந்தக் கலிங்கானது ’அழகன் குட்டை’ என்று அழைக்கப்பட்டிருப்பதை இங்குக் காணப்படும் பிற்காலக் கல்வெட்டின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. இந்த வடிகால் பகுதியில், நான்கு துண்டுகளாக, 21 வரி கொண்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கல்வெட்டுகளில் ’ஸ்வஸ்தி ஸ்ரீ கோமாறபன்மரான திரிபுவனசக்கரவர்த்திகள் எம்மண்டலமும் கொண்டருளிய குலசேகர பாண்டியன்....’ என்ற பாண்டிய மன்னனுடைய மெய்க்கீர்த்தி இடம்பெற்றுள்ளது. துண்டுக் கல்வெட்டு என்பதால் முழுமையான தகவல்களை அறிய முடியவில்லை. இக்கல்வெட்டின் தொடர்ச்சியும் காணப்படவில்லை. மேலும் இங்கு மாறவர்மன் சுந்தரபாண்டியனுடைய கல்வெட்டும் காணப்படுகிறது. அதுமட்டுமின்றி அளற்று நாடான பல்லச்சியைச் சேர்ந்த சிங்கள ராயன் மகள் கொற்றியம்மை கோவிலுக்கு விளக்கெரிக்க நெய் தேவைப்பட்டதால் நிலத்தானம் செய்துள்ளார் என்றும், அந்நிலத்தின் நான்கெல்லைகளூம் இக்கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன. மேலும் இங்கு ஒரு பெருமாள் கோவிலைச் செய்வித்துத் திருமஞ்சனம் செய்து, அதற்குச் செக்குத் தானமளிக்கப்பட்ட செய்தியும் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டின் இறுதிவரியில் சமணப் பள்ளிக்குப் பள்ளிச்சந்தம் அளித்த செய்தியும் காணப்படுகிறது.
தகவல்

முனைவர் செல்லப்பாண்டியன்

புகைப்படங்கள்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

காணொலி

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்