Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

குகைத்தலக் கல்வெட்டு

Cave Inscription

அமைவிடம்

கற்ப்படுக்கைகள்


மொழியும் எழுத்தும்

தமிழ், வட்டெழுத்து


காலம் / அரசன்

பாண்டியர்கள்


ஊர்

அரிட்டாபட்டி

மாவட்டம்

மதுரை

வரலாற்று ஆண்டு
பொது ஆண்டு 9ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
கற்படுக்கையின் வெளிப்புற முகப்பில், முக்குடைக்குக் கீழே அமர்ந்த நிலையில் (அர்த்தபரியாங்காசனத்தில்) தீர்த்தங்கரரின் உருவம் ஒன்று பாறையில் புடைப்புச் சிற்பமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைப் பொது ஆண்டு 9 ஆம் நூற்றாண்டளவில் அச்சணந்தி என்ற சமணத் துறவி செய்வித்துள்ளார். இந்தப் புடைப்புச் சிற்பத்தின் அடியில் உள்ள வட்டெழுத்துக் கல்வெட்டில், திருப்பிணையன் மலையைச் சேர்ந்த பொற்கோட்டுக் கரணத்தார் பெயரில் இத்திருமேனி செய்யப்பட்டிருக்கிறது என்றும், இதற்குப் பாதிரிக்குடி ஊரவையினர் காவலாக இருந்துள்ளனர் என்றும் எழுதப்பட்டுள்ளது. இச்சிற்பத்தின் மேல் நுண் சுதை பூசப்பட்டு ஓவியமும் தீட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுக் குறிப்பிலிருந்தே இம்மலையின் பழம்பெயர் ‘திருப்பிணையன் மலை’ என்றும், ஊரின் பெயர் ‘பாதிரிக்குடி’ என்றும் அறிய முடிகிறது.

கல்வெட்டு :

1. ஸ்ரீ திருப்பிணையன் மலைப் பொ

2. ற் கோட்டுக் கரணத்தார் பேரால்

9. அச்சணந்தி செய்வித்த தி

4. ரு மேனி பாதிரிக்குடியார் ரக்ஷை

தகவல்

முனைவர் துர்கா தேவி

குறிப்புகள்
மதுரை மாவட்டத் தொல்லியல் கையேடு பக்கம்- 137,138; தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி - 14, 19
புகைப்படங்கள்

தெ.துர்கா தேவி