Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

தமிழி / தமிழ் - பிராமிக் கல்வெட்டு

Tamili /Tamil - Brahmi Inscription

அமைவிடம்

குகை- ஓவாமலை  


மொழியும் எழுத்தும்

தமிழி/தமிழ் பிராமி


காலம் / அரசன்

பாண்டியர்கள்


ஊர்

திருவாதவூர்

மாவட்டம்

மதுரை

வரலாற்று ஆண்டு
பொது ஆண்டுக்கு முன் 2ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
ஓவாமலை எனப்படும் பஞ்சபாண்டவர் மலையில் சுமார் 2200 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்ப் பிராமிக் (தமிழி) கல்வெட்டுகள் இரண்டு உள்ளன.

1 ஆம் கல்வெட்டு - ’பாங்காட அர்இதன் கொட்டுபிதோன்’

என்னும் கல்வெட்டு குகையின் புருவத்தில் நீர்வடி விளிம்பின் மேல் பகுதியில் உள்ளது.பாங்காடு என்ற ஊரைச் சேர்ந்த அரிதன் என்பவரால் இக்குகைத் தளத்தில் கற்ப் படுக்கைகள் செய்யப்பட்டது என்பது இதன் பொருளாகும். இங்குப் ’பாங்காட’ என்பதைப் ’பங்காட’ என்றும் படிக்கலாம். இக்கல்வெட்டில் ’ப’வுக்கும் ’ங்’க்கும் நடுவில் இடைவெளி உள்ளதால், இங்கு ஓர் எழுத்து விடுபட்டிருக்கவும் வாய்ப்புள்ளது. இந்த இடத்தை “ன“ என்ற எழுத்தைக் கொண்டு நிரப்பினால் இவ்வூர்ப் பெயர் ’பனங்காடு’ என்று வரும். திருவாதவூருக்கு அருகில் உள்ள ’பனங்காடி’ என்னும் ஊரை இது குறித்திருக்கலாம் எனத் தொல்லியல் துறையினரால் கருதப்படுகிறது.

2 ஆம் கல்வெட்டு -’ உபசன் பர்அசு உறை கொட்டுபிதோன் ‘

என்ற இரண்டாவது கல்வெட்டு நீர்வடி விளிம்பின் கீழ் வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு ’பரசு’ என்ற உபாசகரால்  இந்த உறைவிடம் அமைக்கப்பட்டது  என்று பொருள் தருகிறது. ’உபசன்’ என்ற சொல்லுக்கு உபாத்யாயன் அல்லது சமய ஆசிரியர் என்ற பொருள்கள் உண்டு. கொங்கர் புளியங்குளம், கீழவளவு என்ற ஊரிலுள்ள தமிழ்ப் பிராமிக் கல்வெட்டிலும் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தகவல்

முனைவர் துர்கா தேவி

குறிப்புகள்
இந்தியக் கல்வெட்டு ஆண்டறிக்கை 1965-66, தமிழ் பிராமி கல்வெட்டுகள் பக்கம்: 46-54
புகைப்படங்கள்

தெ.துர்கா தேவி

தெ.துர்கா தேவி

தெ.துர்கா தேவி