Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

தமிழி / தமிழ் - பிராமிக் கல்வெட்டு

Tamili /Tamil - Brahmi Inscription

அமைவிடம்

கற்படுக்கைகள்


மொழியும் எழுத்தும்

தமிழி/தமிழ் பிராமி


வரலாற்று ஆண்டு

பொது ஆண்டு 2 ஆம் நூற்றாண்டு


ஊர்

யானைமலை ஒத்தக்கடை

மாவட்டம்

மதுரை

கூடுதல் விவரங்கள்
யானை மலை, ‘ஆனைமலை’ என்றும் அழைக்கப்படுகிறது. ஆனைமலையில் உள்ள குகைத் தளத்தில் ஏறக்குறைய 20 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்விடத்தில் தமிழி /தமிழ்ப் பிராமி கல்வெட்டு காணப்படுகிறது. இது பொது ஆண்டு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.

கல்வெட்டு:

இவ குன்றத்தூ உறையுள் பாதந்தான் ஏரி ஆரிதன் அத்துவாயி அரிட்டகாயிபன்

என்னும் இரண்டு வரிகள் இடம் பெற்றுள்ளன. ’இபம்’ என்றால் யானை, ’குன்றம்’ என்றால் மலை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள ’இவ குன்றம்’ என்பது ஆனைமலையைக் குறிக்கிறது. ’பா’ என்றால் படுக்கை/ தங்குவதற்கான கற்படுக்கை எனப் பொருள் கொள்ளலாம். ஏரி ஆரிதன், அத்துவாயி அரட்டக்காயிபன் என்று இரண்டு துறவியர் பெயர்களும் காணப்படுகின்றன.
தகவல்

முனைவர் துர்கா தேவி

குறிப்புகள்
தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுகள்- பக்கம் 66-68
புகைப்படங்கள்

தெ.துர்கா தேவி