Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

கண்மாய்க் கல்வெட்டு

Irrigation Tank Inscription

அமைவிடம்

நிலையூர் குளத்தின் மதகுகளில் உள்ளது.


மொழியும் எழுத்தும்

சம்ஸ்கிருதம், கிரந்தம்


காலம் / அரசன்

முற்காலப் பாண்டியர்


ஊர்

நிலையூர்

மாவட்டம்

மதுரை

வரலாற்று ஆண்டு
பொது ஆண்டு 9ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
மதுரை மாவட்டத்தில் உள்ள சிற்றூரான நிலையூரில் உள்ள கண்மாய் இக்கிராமத்தின் நீர் ஆதாரம் ஆகும். நீர் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு, பாண்டிய மன்னர்களின் தலையாய கடமையாக இருந்ததைச் செப்புத் தகடுகள் மற்றும் கல்வெட்டுகள் உறுதிப்படுத்துகின்றன. அணையை வலுப்படுத்துவதும், கல் மதகுகள் அமைப்பதும் பாண்டியர் ஆட்சியின் முக்கியப் பங்களிப்பாகக் கருதப்படுகிறது.

நிலையூர் கண்மாய் முற்காலப் பாண்டியர்களின் காலத்தில் புதுப்பிக்கப்பட்ட ஒரு தலைசிறந்த கண்மாயாகும். இக்கண்மாயின் நான்கு மதகுகளில் ஒன்றில் பாண்டிய மன்னன் பராந்தக வீரநாராயணன் (பொது ஆண்டு 860-905) என்பவரின் பெயர் பொறித்த கல்வெட்டு உள்ளது. கல்வெட்டில் ’ஸ்ரீ விர நாரணந்’ என்று எழுதப்பட்டுள்ளது. இங்குள்ள தொட்டியில் மன்னருடைய பெயர் பொறிக்கப்பட்டுள்ளதால், அவர் ஆட்சியின் போது கண்மாய் புதுப்பிக்கும் பணியை மேற்கொண்டுள்ளார் என அறிந்துகொள்ள முடிகிறது.
தகவல்

முனைவர் ஆத்மநாதன்

குறிப்புகள்
இந்தக் கல்வெட்டானது நடுவண் அரசு தொல்லியல் துறையின் கல்வெட்டு ஆண்டறிக்கை 223/1941இல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் வெளியீடான மதுரை மாவட்டக் கல்வெட்டுக்கள் தொகுதி 2இல், பக்கம் எண் 125இல் தொடர் எண் 284/2003-இல் வெளியிடப்பட்டுள்ளது.
புகைப்படங்கள்

முனைவர் ஆத்மநாதன் மற்றும் முனைவர் கண்ணன்

முனைவர் ஆத்மநாதன் மற்றும் முனைவர் கண்ணன்