Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

கண்மாய்க் கல்வெட்டு

Irrigation Tank Inscription

அமைவிடம்

மாடக்குளம் கண்மாய் உட்பகுதியில் நடப்பட்ட தனிக்கல்


மொழியும் எழுத்தும்

தமிழ்


வரலாற்று ஆண்டு

பொது ஆண்டு 12ஆம் நூற்றாண்டு


ஊர்

மாடக்குளம்

மாவட்டம்

மதுரை

கூடுதல் விவரங்கள்
இங்குள்ள பெரிய கண்மாயின்‌ பெயர் மாடக்குளம்‌ என்பதாகும். பின்பு ஊருக்கும்‌ அப்பெயரே வழங்கலாயிற்று. பல பிற்காலப்‌ பாண்டியர்‌ கல்வெட்டுகளில்‌ மாடக்குளம்‌, ‘மதுரோதய வளநாட்டில்‌ மாடக்குளக்கீழ்‌ மதுரை’ என குறிக்கப்பட்டுள்ளது.‌ மாடக்குளக்கீழ்‌ மதுரை, மாடக்குளக்கீழ்‌ திருப்பரங்குன்றம்‌, மாடக்குளக்கீழ்‌ அரியூர்‌, மாடக்குளக்கீழ்‌ குலசேகரபுரம்‌, மாடக்குளக்கீழ்‌ கொடிமங்கலம்‌ என்று பல கிராமங்கள்‌ குறிப்பிடப்படுகின்றன. இதன்‌ மூலம்‌ 'குளக்கீழ்‌' என்பது ஒரு நாட்டுப்பிரிவு வகையைச்‌ சேர்ந்தது எனக்‌ கருதலாம்‌.

மதுரைக்கு நீர்ப்பாசனம் தரும் மாடக்குளத்தினை எண்திசை நாட்டு எறி வீரகணத்தார் என்று வணிகர்-வீரர் குழு இக்குளத்தைச் சீர்செய்து காத்து நின்றதை இக்கல்வெட்டு கூறுகிறது. இக்கல்வெட்டின் மேற்புறத்தில் குடை, சாமரங்கள், விளக்கு, கத்தி, கலப்பை, கொம்பு, ஆகிய உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.

கல்வெட்டு:

1 .ஸ்வஸ்திஸ்ரீ இ

2. ந்த குளமுங்கா

3. லும் எண்டிசை

4. நாட்டு எறி வீர க

5. ணத்தான்

தகவல்

முனைவர் ஆத்மநாதன்

குறிப்புகள்
இந்தக் கல்வெட்டு ஆய்வாளர் வே.திருநங்கை அவர்களால் படி எடுக்கப்பட்டு ஆவணம் இதழ் 19, 2008இல் 62ஆம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
புகைப்படங்கள்

முனைவர் ஆத்மநாதன்

முனைவர் ஆத்மநாதன்