Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

கண்மாய்க் கல்வெட்டு

Irrigation Tank Inscription

அமைவிடம்

உலகாணி கண்மாயில் உள்ள தனிக்கல்லில் உள்ளது.


மொழியும் எழுத்தும்

தமிழ் மற்றும் சமஸ்கிருதம், தமிழ் மற்றும் கிரந்தம்


காலம் / அரசன்

பாண்டியர்


ஊர்

உலகாணி

மாவட்டம்

மதுரை

வரலாற்று ஆண்டு
பொது ஆண்டு 13ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
ஒரு தூண்போன்ற அமைப்பில் மேல்பகுதியில் விநாயகர் சிற்பம் செதுக்கப்பட்டு அதன் கீழும், பின்பகுதியிலும், பக்கவாட்டிலும், கல்வெட்டுகள் வெட்டப்பட்டுள்ளன. இது நீர்ப்பாசனக் குளங்கள் பராமரிப்பு குறித்துக் கூறும் கல்வெட்டு ஆகும். குலசேகராதிப சதுர்வேதிமங்கலச் சபையார் உலகாணி ஊர்க் குளங்களிலிருந்து கிடைக்கும் பாசிபாட்ட வரி (மீன் பிடிப்பதற்கான வரி) வருவாயைக் கொண்டு ஆண்டுதோறும் குளங்களைக் குழிவெட்டிப் பராமரிக்க அனுமதித்துள்ள செய்தி பற்றி சொல்லப்படுகிறது. பின்பகுதி சமஸ்கிருதத்தில் உள்ளது.
தகவல்

முனைவர் ஆத்மநாதன்

குறிப்புகள்
இக்கல்வெட்டு படி எடுக்கப்பட்டு 1963-64 ஆம் ஆண்டு கல்வெட்டு ஆண்டறிக்கையில் எண் 283ஆக வெளியிடப்பட்டுள்ளது.

மீடியா கோப்புகள் இல்லை

No media Files