Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

கோயில் கல்வெட்டு

Temple Inscription

அமைவிடம்

வில்லடியான் கருப்பசாமி கோயிலில் உள்ளது.


மொழியும் எழுத்தும்

தமிழ்


வரலாற்று ஆண்டு

பொது ஆண்டு 1895 (மன்மத ஆண்டு, வைகாசி 14, ஞாயிறு)


ஊர்

எலியார்பத்தி

மாவட்டம்

மதுரை

கூடுதல் விவரங்கள்
இக்கல்வெட்டு 5 அடிக்கு இரண்டு அடி உள்ள பலகைக் கல்லில் ஒழுங்கற்றுப் பொறிக்கப்பட்டுள்ளது. எலியார்பத்தி தெற்கு வழி ஆலயம், நிலைக்கால் மற்றும் சிலைகளுடன் அமைக்கப்பட்டு அதற்கு 73 செண்ட் நிலம் வழங்கப்பட்டு 6 கிராமத்தவர்கள் வரித்தீர்வை கட்டி அக்கோயிலை வழிபட்டு வர ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்பதை இக்கல்வெட்டு கூறுகிறது.

கல்வெட்டு:

1.உ

2. வில்லடியன் தெற்கு

3.வளிட சுவாமிகளரிய மன்

4. மத வருவையாசி மீ 14உஞா

5.யத்து கிளமை அமுர்த சித்த யோகமு

6. ள்ள சுபயோக சுபதினத்தில்

7.எலியார்பத்தி கிராமத்தில் தெற்

8. குவளி ஆலயத்தில் நிலைகல்

9. நாட்டி சிலையெடுத்து சிலைக்கி

10.சுவாமி கும்பிடு காட்டியால்..

11. மேற்படி ஆலயமும் கோவிலும் நி

12. லமும் காநி கணக்கு வெள்ளை

13. யன் பட்டயத்தில்[ட்] சேற்ந்த

14.படியால் மேற்படி பூருவ வி நிலமும்

15.செண்டு 73 க்கு தீருவை நிலம்

16.களும் மேற்படி நிலமும் கோவிலு

17. சாமியாளும் ஒருவருக்கு

18.சொந்தமில்லாமல் இந்]

19. த ஆலயத்தில் கும்பிடுகிர

20. பேர்கள் எலியார்பத்தி

21. யிலுள்ளவர்களுக்கும் பாரபத்தியில் அனை

22. வர்களுக்கும் வெள்ளிய தண்டத்தலுள்ளவர்

23.களுக்கும் பொதும்பிலுள்ளவர்களு

24. க்கும் பள்ளப்பட்டியிலுள்ளவர்களுக்கும் கறு

25. ங்குளத்திலுள்ளவர்களுக்கும் எங்கள் பங்

26. காளிகள் 6 கிராமத்திலுள்ளவர்

27. களுக்கும் பொதுமைனாட்டியா

28. ல மேற்படி கிராமம் வில்லடி விநாயகமூர்த்தி

29. தெற்கு வளி ஆலை[ய]த்திலுள்ள சுவாமி

30. களரிய இந்த கோவில் கும்பிட்டு

31.கிற பங்காளி களநவோர்களும் வரி தீ

32. ருவெயும் குடுத்துகும்பிட்டு வறுவா

33. களாகவும்

தகவல்

முனைவர் ஆத்மநாதன்

குறிப்புகள்
இந்தக் கல்வெட்டானது தமிழகத் தொல்லியல் கழகத்தின் வெளியீடான ஆவணம் கல்வெட்டு ஆராய்ச்சி இதழ் 33/2022 பக்கம் : 83-84இல் வெளியிடப்பட்டுள்ளது.

மீடியா கோப்புகள் இல்லை

No media Files