Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

தெலுங்கு கல்வெட்டு

Telugu inscription

அமைவிடம்

திருநகர்


மொழியும் எழுத்தும்

தெலுங்கு


கூடுதல் விவரங்கள்

மதுரை திருநகர் பகுதியில் உள்ள குளம் அருகே இடம்பெற்றுள்ள இந்தக் கல்லில் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. கல்வெட்டு தெலுங்கு மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது. எழுத்துக்கள் மிகவும் தேய்ந்த நிலையில் உள்ளன. எனவே, அதன் வரிகளைத் தெளிவாகப் படிக்க இயலவில்லை. தெலுங்கு மொழி என்பதால் இக்கல்வெட்டு விஜயநகர அல்லது நாயக்கர் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இக்கல்லின் ஒரு பக்கம் கல்வெட்டு எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கல்லின் மறுபக்கம் ஓர் ஆணின் உருவம் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. அவர் ஒரு குச்சியின் இருமுனையிலும் பைகளை கட்டி தொங்கவிட்டு தன் தோளில் சுமந்து செல்வது போல் சிற்பம் அமைந்துள்ளது. அவரது இடக்கையில் கமண்டலம் போன்ற ஒரு பொருளும் காணப்படுகிறது.


ஊர்

திருநகர்

மாவட்டம்

மதுரை

தகவல்

முனைவர் ஆத்மநாதன்

புகைப்படங்கள்

திரு. உதயகுமார், திரு. முத்துப்பாண்டி

திரு. உதயகுமார், திரு. முத்துப்பாண்டி

திரு. உதயகுமார், திரு. முத்துப்பாண்டி

திரு. உதயகுமார், திரு. முத்துப்பாண்டி

திரு. உதயகுமார், திரு. முத்துப்பாண்டி

திரு. உதயகுமார், திரு. முத்துப்பாண்டி