Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

மடைக் கல்வெட்டு

Sluice Inscription

அமைவிடம்

நெடுஞ்சாலை அருகில் கண்மாய்க் கரையில் உள்ள மடையில் உள்ளது.


மொழியும் எழுத்தும்

தமிழ்


காலம் / அரசன்

வீரப்ப நாயக்கர் காலம்


ஊர்

வடிவேல்கரை

மாவட்டம்

மதுரை

வரலாற்று ஆண்டு
பொது ஆண்டு 1590 (1512+ 78 = 1590)
கூடுதல் விவரங்கள்
[அங்க] நாயக்கன் ஐயப்பசிவன் என்பவருடைய கண்காணிப்பில் கண்ணன் பிள்ளை மணியமாக இருந்தபோது திருப்பரங்குன்றம் குமார சுவாமி திருவிடையாட்டமாகக் குளம் வெட்டி அதிக நீர் வெளியேறும் வகையில் கலிங்கு கட்டின செய்தியை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. கல்லின் மேல் பகுதியில் மூன்று சாய்சதுர வடிவங்கள் ஒன்றன்பின் ஒன்றாக காணப்படுகின்றன.

கல்வெட்டு:

1. சகாத்தம் ௲ருள

2. க ய ௨ ன் மேல் செல்

3. லா நின்ற விகுறு

4. தி ௵ [அங்க] நா

5. யக்க ரயப்ப சிவன்

6. வர்கள் பிராமத்தியத்தி

7. ல் கண்ண பிள்ளை

8. ய்யனவர்கள் மணி

9. யத்தில் திருப்பரங்

10. குன்றம் குமார சுவா

11. மியார் திருவிளையா

12. டலான வாத்தகரை

13. க் குளமும் வெட்டி க

14. லிங்கியும் கட்டி மு

15. டிஞ்சது உ

தகவல்

முனைவர் ஆத்மநாதன்

புகைப்படங்கள்

உதயகுமார், ஆத்மநாதன்