It is located near the Vinayagar Temple in Thirumalai Rayapuram.
Language & Script
Tamil
A historic year
1895CE
Village Name
Thirumalairayapuram
District
Dindigul
கூடுதல் விவரங்கள்
திருமலைராயபுரத்தில் உள்ள விநாயகர் கோயிலுக்கு அருகில் உள்ள இக்கல்வெட்டில்,
‘உ
சிவமயம்
திருமலைராயபுரம்
1895 ௵ க்கு
தமிழ் மன்மத வ
ருஷம் வைகாசி
௴ (6 ௳) போழி
யம்மாள் ஊர்
திம்மனாகு கவு
ண்டர் மகன்
திருமலைய
கவுண்டரால்
ஊர் சத்திரம்
பேட்டை உ
(ற்பத்)தி செய்
தது ’. என்ற சொற்கள் வெட்டப்பட்டுள்ளன.
திருமலைராயபுரம் என்னும் இவ்வூரில், பொது ஆண்டு 1895 ஆம் ஆண்டில், மன்மத வருஷம் வைகாசி மாதத்தில் திம்மனாகு கவுண்டர் மகன் திருமலைய கவுண்டர் என்பவர், புதிதாக இப்பகுதிக்கு குடியேற்றம் செய்த மக்களுக்காக சத்திரம் செய்து வழங்கியதை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. பின்பு காலப்போக்கில் மக்கள் தொகை பெருகி, இவ்வூர் விரிவடைந்துள்ளதாகவும், அவர் நினைவாக இவ்வூர் திருமலைராயபுரம் என்றழைக்கப்படுவதாகவும் இவ்வூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.