Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

மேட்டுப்பட்டி பாறை ஓவியம்

Mettupatti Rock Painting

வண்ணங்கள்

வெள்ளை


அளவுகள்

சுமார் 77.85 அடி நீளம் மற்றும் 10.07 அடி அகல பாறை பரப்பில் வரையப்பட்டுள்ளது.


காலம்

பெருங்கற்காலம் மற்றும் பிந்தைய காலங்கள்


ஊர்

க. மேட்டுப்பட்டி

மாவட்டம்

திண்டுக்கல்

ஓவியத்தின் தற்போதைய நிலை
சிதலமடைந்துவிட்டது
கூடுதல் விவரங்கள்
குறுக்குப் பாறை எனும் குகைத்தளம் கிழக்கு மேற்காக சுமார் 100 அடி நீளமும், 2 – 5 அடி உயரத்திலும் உள்ளது. மேலும் தரைப்பகுதியில் இருந்து 10 அடி உயரத்தில் உள்ளது. இக்குகை அருகே செல்லும் மலைப்பாதை தொன்மையானது. இப்பாதை திண்டுக்கல் பகுதியில் இருந்து இராசபாளையம் வழியாக குற்றாலம் செல்லக்கூடியது. எனவே, பல காலம் முன்பு வணிகர்கள் இப்பாதையைப் பயன்படுத்தி வந்தனர்.

இந்தக் குகையில் வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட ஓவியங்கள் வெள்ளை நிறத்தில் காணப்படுகின்றன. அவற்றில், மனித உருவங்கள் வெவ்வேறு நிலையிலும், கூட்டமாகவும், தனியாகவும், விலங்குகளுடனும் வரையப்பட்டுள்ளன. மனித உருவங்களில் சில பெண் உருவங்களும் காட்டப்பட்டுள்ளன. இதைத் தவிர அடையாளம் காணமுடியாத ஓவியங்களும், சில குறியீடுகளும் ஆங்காங்கே தென்படுகின்றன. இங்குள்ள ஓவியங்களில், திமில் உள்ள மாடு ஒன்றை மனிதன் ஒருவன் அடக்க முயல்வது போல ஒரு காட்சி உள்ளது. அது இன்று நடைமுறையில் இருக்கும் ஏறு தழுவல், ஜல்லிக்கட்டு போன்ற வழக்கத்தை குறிப்பதாக இருக்கலாம். அதே போல குதிரை மீது அமர்ந்திருக்கும் ஒருவனை, தரையில் இருப்பவன் நீண்ட வேல் கம்பு போன்ற ஆயுதத்தால் தாக்க முற்படுவது போல ஒரு காட்சி உள்ளது. அதனருகே மற்றொரு குதிரை வீரன் தாக்கப்பட்டு வீழ்ந்து கிடப்பது போல ஒரு காட்சியும் காட்டப்பட்டுள்ளது. இது வழிப்பறி போன்ற நிகழ்வினைக் காட்டுவதாக இருக்கலாம். மற்றொரு ஓவியத்தில் வீரன் ஒருவன் புலி போன்ற விலங்கின் மீது பயணிப்பது போல காட்சி அமைந்துள்ளது.

இங்குள்ள ஓவியங்கள் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வெறு ஓவியர்களால் வரையப்பட்டுள்ளன. இங்குள்ள தொன்மையான ஓவியங்கள் இரும்பு காலத்தைச் சேர்ந்ததாக தெரிகிறது. அதுபோல பிற்காலங்களிலும் இவ்விடத்தில் தொடர்ந்து ஓவியங்கள் வரையப்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இங்கு வரையப்பட்ட ஓவியங்கள் பெரும்பாலும் கோட்டோவியமாகவே உள்ளன. சில இடங்களில் உருவங்களுக்குள் வண்ணப்பூச்சு காணப்படுகிறது. இங்கு வரையப்பட்ட ஓவியங்களில், விலங்கு உருவங்கள் எளிமையாகவும் நேர்த்தியான வடிவமைப்பையும் கொண்டுள்ளன.
தகவல்

முனைவர் முத்தையா

புகைப்படங்கள்

தே.ராமச்சந்திரன்

தே.ராமச்சந்திரன்

தே.ராமச்சந்திரன்

தே.ராமச்சந்திரன்

தே.ராமச்சந்திரன்

தே.ராமச்சந்திரன்