Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

மூணாண்டிப்பட்டி பாறை ஓவியம்

Moonandipatti Rock Art

வண்ணங்கள்

சிவப்பு மற்றும் வெள்ளை


அளவுகள்

குகையின் நீளம் 20 மீட்டர், உயரம் 4.5 மீட்டர்


காலம்

வரலாற்று காலத்துக்கு முந்தியதாக இருக்கலாம்


ஊர்

மூணாண்டிப்பட்டி

மாவட்டம்

தேனி

கூடுதல் விவரங்கள்
இயற்கையாக அமைந்த இந்தக் குகைத் தளத்தில் சிவப்பு மற்றும் வெள்ளை நிறப் பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. சிவப்பு நிற ஓவியங்களில் அடையாளப்படுத்த முடியாத பெரிய கோடுகள் இரண்டு இடத்தில் வரையப் பட்டிருக்கின்றன. இவ்விடத்தில் காணப்படும் பிற சிவப்பு நிற ஓவியங்கள் மங்கிய நிலையில் காணப்படுகின்றன. வெள்ளை நிற ஓவியங்களில் காணப்படும் சில மனிதர்கள் கையில் ஆயுதங்கள் ஏந்திச் சண்டைக்குத் தயார் நிலையில் இருப்பது போன்றும் காட்சி இடம் பெற்றுள்ளது.

மற்றொரு பாறை ஓவியத்தில் காணப்படும் மனிதன் ஒருவன் வளரி அல்லது அரிவாள் போன்ற ஆயுதத்தை ஓங்கிப் பிடித்துள்ளான். இவற்றோடு வெண்மை நிறத்தில் சில விலங்குகளும் வரையப்பட்டிருக்கின்றன. இக்குகைத் தளத்தில் மூன்று வெவ்வேறு காலக்கட்டங்களில் வரையப்பட்ட ஓவியங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் சிவப்பு நிறத்தில் வரையப்பட்ட ஓவியங்கள் அதிகப் பழமையானவை என கருதப்படுகிறது.
ஓவியத்தின் தற்போதைய நிலை
பாதுகாக்கப்பட வேண்டிய பாறை ஓவியம்
தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

புகைப்படங்கள்

சி. மாணிக்கராஜ், அகிலன்

சி. மாணிக்கராஜ், அகிலன்

சி. மாணிக்கராஜ், அகிலன்

சி. மாணிக்கராஜ், அகிலன்

சி. மாணிக்கராஜ், அகிலன்

சி. மாணிக்கராஜ், அகிலன்

சி. மாணிக்கராஜ், அகிலன்

சி. மாணிக்கராஜ், அகிலன்

சி. மாணிக்கராஜ், அகிலன்

காணொலி

சி. மாணிக்கராஜ், அகிலன்