It is located on the road from Kullapuram village to Periyakulam.
worship
4 feet tall
Village Name
Kullapuram
District
Theni
கல்வெட்டுகள்
இல்லை
காலம் / அரசன்
பொது ஆண்டு 13 - 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல்லாக இருக்கலாம்.
கூடுதல் விவரங்கள்
இந்த நடுகல்லில் வீரன் ஒருவன் நின்ற கோலத்தில் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளான். வீரன் தன் வலக்கையில் வாள் ஏந்தியபடியும் இடக்கையை இடுப்பில் பொருத்தியவாறும் நிற்கிறான். வீரன் தன் கழுத்து, இடுப்பு, தோள், கைகள், கால்கள் ஆகியவற்றில் அணிகலன்கள் அணிந்துள்ளான். மேலும், அவன் இடுப்பில் குறுவாள் வைத்துள்ளான். வீரனின் கால் அருகில் யானை உருவம் ஒன்று மிகச் சிறிய அளவில் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. எனவே, இவ்வீரன் யானையுடன் சண்டையிட்டு இறந்தவனாகவோ, யானைப்படையைச் சார்ந்தவனாகவோ இருந்திருக்கலாம். நடுகல்லின் சிற்ப அமைதியின்படி இச்சிற்பம் பொது ஆண்டு 13-14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கணிக்கப்படுகிறது.
Inscription
No
Period / King
The sculpture is believed to be from the 13th - 14th century CE.
Additional Information
On this hero stone, a warrior is sculpted in a standing posture, in the form of a relief sculpture. The warrior holds a sword in his right hand and his left hand is placed on his hip. He is adorned with ornaments on his neck, waist, shoulders, arms, and legs. Additionally, he has a dagger at his waist. Near the warrior's foot, a small elephant figure is intricately sculpted , in the form of a relief sculpture. Therefore, this warrior may have been someone who died fighting an elephant or he was someone associated with the elephantry division of the army. Based on the stylistic features of the sculpture, it is estimated to date to the 13th–14th century CE.