Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

யானை குத்திப் பட்டான் நடுகல்

Memorial Stone for Battle Against Elephant

அமைவிடம்

தங்கம்மாள்புரத்தில் பொட்டியம்மன் கோவில் அருகே உள்ள தென்னந்தோப்பில்


அளவு

3.5 அடி உயரம், 2 அடி அகலம்


வழிபாடு

இல்லை


ஊர்

தங்கம்மாள்புரம்

மாவட்டம்

தேனி

கல்வெட்டுகள்
இல்லை
காலம் / அரசன்
பொது ஆண்டு 14 -15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்
கூடுதல் விவரங்கள்
யானையுடன் சண்டையிட்டு வீர மரணமடைந்த ஒருவரின் நினைவாக இந்த நடுகல் எடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டு அடுக்காகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நடுகல்லில் மேலடுக்கில் வீரன் யானையுடன் சண்டையிடும் காட்சி புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. வீரனைத் தாக்குவதற்காக முன்னேறி வரும் யானை தன் தும்பிக்கையை உயர்த்தி நிற்கிறது. வீரனும் தன் வலக்கையில் ஆயுதம் ஏந்தியபடி தாக்குதலை எதிர்கொள்ளத் தயராக நிற்கிறான். வீரன் அணிகலன்கள் அணிந்துள்ளான். கீழ் அடுக்கில் யானையுடன் சண்டையிட்டு வீரமரணம் அடைந்த வீரனுடைய மனைவியர் இருவர் சதி என்னும் உடன்கட்டை ஏறித் தங்கள் உயிரை மாய்த்துள்ளனர் என்பதை வெளிக்காட்டும் விதமாக வீரனுடன் இருவரும் பீடம் ஒன்றில் அமர்ந்தவாறு புடைப்புச் சிற்பமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். கீழ் அடுக்கு தற்போது மண்ணுக்குள் புதைந்துள்ளது.
தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

புகைப்படங்கள்

ப.பிரதீப்

ப.பிரதீப்