Located on the road from Kombai to Uthamapalayam, opposite to Kosavampatti Sikkichi Amman Temple.
worship
3.5 feet tall
Inscription
No
Village Name
Kombai Kosavampatti
District
Theni
காலம் / அரசன்
வரலாற்றுக் காலம்
கூடுதல் விவரங்கள்
இவ்விடத்தில் புலியுடன் சண்டையிட்டு இறந்த வீரன் ஒருவனுக்காக நடுகல் எடுக்கப்பட்டிருக்கிறது. இதைப் ’புலிக்குத்திப் பட்டான் நடுகல்’ என்றழைப்பர். இந்நடுகல்லில் வீரனுடைய உருவம் பெரியதாகவும் புலியின் உருவம் சிறியதாகவும் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டிருக்கிறது. வீரன் தன் உடம்பை ஒரு பக்கம் வளைத்த நிலையில் நின்று கொண்டிருக்கிறான். தனது இரு கைகளாலும் பிடித்திருக்கும் பெரிய ஈட்டியால் புலியின் முதுகில் குத்துவது போன்று சிற்பம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. புலியின் வால் மேல்நோக்கியுள்ளது. வீரன் தன் இடுப்பில் குறுவாள் வைத்துள்ளான்; தனது கழுத்து, கை, தோள், காதுகள் ஆகியவற்றில் அணிகலன்கள் அணிந்துள்ளான். நடுகல்லின் வலப்பக்க மேல் பகுதியில் சூரியன், சந்திரன் ஆகியன காட்டப்பட்டுள்ளன. நடுகல்லின் மேல்பகுதியில் இருக்கும் அலங்கார வடிவங்கள் சிதைந்துள்ளன.
அளவு
3.5 அடி உயரம்
Period / King
Historical period
Additional Information
A hero stone has been erected here in memory of a warrior who died fighting a tiger. This is known as the "Pulikkuthi Pattān Hero Stone." In this hero stone, the figure of the warrior is carved larger, while the figure of the tiger is smaller. This relief sculpture depicts the warrior standing with his body bent to one side, striking the tiger on its back with a large spear held in both of his hands. The tiger’s tail is pointed upwards. The warrior is shown with a dagger tucked at his waist and ornaments adorning his neck, arms, shoulders, and ears. At the upper right side of the stone, the Sun and Moon are illustrated. The ornamental designs at the top of the hero stone are damaged.