Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

புத்தர் சிற்பம்

Buddha Sculpture

அமைவிடம்

எல்லைப்பட்டி ஊருக்குக் கிழக்கே உள்ள முல்லையாற்றில் கட்டப்பட்ட அணையில்


அளவு

4.5 அடி உயரம், 3 அடி அகலம்


வழிபாடு

இல்லை


ஊர்

எல்லைப்பட்டி

மாவட்டம்

தேனி

கல்வெட்டுகள்
இல்லை
காலம் / அரசன்
பொது ஆண்டு 9-10ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
இந்தச் சிற்பத்தில் காணப்படும் புத்தர், தன் ஒரு காலை முழங்கால் வரை மடித்து, மற்றொரு காலைத் தொடையில் வைத்து (அர்த்த பத்மாசனம்) , உடலை நன்கு நிமிர்த்தியபடி அமர்ந்துள்ளார். ஒரு தடுப்பணையின் அருகே அமைந்துள்ளதால் இச்சிற்பத்தை இப்பகுதி மக்கள் ’அணைப் புத்தம்’ என்ற பெயரில் அழைக்கின்றனர். இந்தச் சிற்பத்தில் காணப்படும் புத்தரின் கைகள் தியான முத்திரையில் உள்ளதால் இவர் தியானத்தில் ஆழ்ந்துள்ளார் எனலாம். இவரது தலை உடைந்த நிலையில் உள்ளது. புத்தர் மேலாடையாக ’சங்காதி’ என்னும் ஆடையை அணிந்துள்ளார். இச்சிற்பத்தில் ஆடை காட்டப்பட்டுள்ளதால், தலை உடைந்தபோதிலும் இதைச் சமண சிற்பத்திலிருந்து வேறுபடுத்த முடிகிறது. ஏனெனில், திகம்பர சமணர் ஆடை அணிவதில்லை. எனவே தீர்த்தங்கரர் சிற்பங்களில் பொதுவாக ஆடை காட்டப்படுவதில்லை.
தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

புகைப்படங்கள்

சி.மாணிக்கராஜ், ம.ரேவன்

சி.மாணிக்கராஜ், ம.ரேவன்

சி.மாணிக்கராஜ், ம.ரேவன்

காணொலி

சி.மாணிக்கராஜ், ம.ரேவன்