Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

சகோதரர்கள் நடுகல்

Hero Stone of Brothers

அமைவிடம்

தேவாரம் சந்தை தெரு அருகே உள்ள தனியார் நிலத்தில்


அளவு

5 அடி உயரம், 3 அடி அகலம்


வழிபாடு

இல்லை


ஊர்

தேவாரம்

மாவட்டம்

தேனி

கல்வெட்டுகள்
இல்லை
காலம் / அரசன்
பொது ஆண்டு 17ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
இச்சிற்பம் இருவீரர்களுக்கு எடுக்கப்பட்ட நடுகல் ஆகும். இதைச் ’சகோதரர்கள் நடுகல்’ என்று இப்பகுதி மக்கள் அழைக்கின்றனர். இந்நடுகல்லில் காணப்படும் வீரர்கள் சமபங்க நிலையில் நேராக நின்றவாறு புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளனர். வலப்புறம் இருப்பவரின் கையில் தடி அல்லது உலக்கை போன்ற ஆயுதமும், இடப்புறம் இருப்பவரின் கையில் ஈட்டியும் காட்டப்பட்டுள்ளன. இருவரும் முறுக்கு மீசையுடனும், இடையில் குறுவாளுடனும், நாயக்கர் கால ஆடை, தோள்வளை, கைவளை, கடகவளை, பெரிய முகப்புடன் கூடிய மாலை, மூன்று சரம் கொண்ட காதணி போன்ற ஆபரணங்களுடனும் அழகாக வடிக்கப்பட்டுள்ளனர். இச்சிற்பத்தின் மேல்பகுதி கோவில் விமானத்தின் கபோதம் மற்றும் சிகரப் பகுதியை ஒத்து அமைக்கப்பட்டுள்ளது. சிற்பத்தின் ஒருபகுதி மண்ணில் புதைந்துள்ளது.
தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

புகைப்படங்கள்

ம.ரேவன்

ம.ரேவன்

ம.ரேவன்