Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

குதிரை வீரன் நடுகல்

Horse-mounted Warrior's Hero Stone.

அமைவிடம்

தேவதானப்பட்டியில் இருந்து மூங்கில் அணை காமாட்சி அம்மன் கோவில் செல்லும் சாலையில் உள்ளது


அளவு

2.5 அடி உயரம்


வழிபாடு

ஆம்


ஊர்

தேவதானப்பட்டி

மாவட்டம்

தேனி

கல்வெட்டுகள்
இல்லை
காலம் / அரசன்
பொது ஆண்டு 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது
கூடுதல் விவரங்கள்
குதிரை வீரன் ஒருவனுடைய வீர மரணத்திற்குப் பின்பு அவன் துணிவையும் புகழையும் நினைவுபடுத்தும் விதமாக இந்த நடுகல் எடுக்கப்பட்டிருக்கிறது. குதிரையின் மேல் அமர்ந்துள்ள வீரன் தன் வலக்கையில் ஈட்டியையும், இடக்கையில் குதிரையின் கடிவாளத்தையும் இழுத்துப் பிடித்தவாறு புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளான். குதிரை தன் முன்னங்கால்களை உயர்த்தியவாறு நிற்கிறது. இந்நடுகல்லின் மேல்பகுதி, கோவில் விமானத்தின் கபோதப் பகுதியை ஒத்து அமைக்கப்பட்டுள்ளது. இக்குதிரை வீரன் இப்பகுதியில் வாழ்ந்த தலைவனாகவோ, குதிரைப்படை வீரனாகவோ இருந்திருக்கலாம். இந்நடுகல் வீரனை, இப்பகுதி மக்கள் ஊர் காக்கும் காவல் தெய்வமாக வணங்கி வருகின்றனர். இவ்வளாகத்தில் சிறு கற்பீடங்கள் அமைத்து வழிபடப்பட்டு வருகின்றனர்.
தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

புகைப்படங்கள்

ம.ரேவன்

ம.ரேவன்

ம.ரேவன்