Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

தவ்வைச் சிற்பம்

Jyeshta Devi Sculpture

அமைவிடம்

சின்னமனூர் ஊருக்கு மேற்குப் பக்கம் உள்ள புறவழிச் சாலையின் ஓரமாக உள்ளது. இத்தவ்வை என்று அழைக்கப்படும் மூத்த தேவி சிற்பத்திற்குக் கிழக்குப் பக்கம் இலட்சுமி நாராயண பெருமாள் கோவிலும், சிவகாமி அம்மன் என்ற பெயரில் அழைக்கப்படும் சிவன் கோவிலும் உள்ளன.


அளவு

4 அடி உயரம், 6 அடி அகலம்


வழிபாடு

இல்லை


ஊர்

சின்னமனூர்

மாவட்டம்

தேனி

கல்வெட்டுகள்
இல்லை
காலம் / அரசன்
சிற்ப அமைதியின் அடிப்படையில் பொது ஆண்டு 9-10ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது.
கூடுதல் விவரங்கள்
இது தவ்வை என்றழைக்கப்படும் மூத்த தேவியின் சிற்பம் ஆகும். சமஸ்கிருதத்தில் இவரை ஜேஷ்டா தேவி என்றழைப்பர். இச்சிற்பத்தில் மூத்ததேவி தனது பிள்ளைகளான மாந்தன் (அல்லது கோமுகன்) மற்றும் மாந்தி ஆகியோருடன் ஒரு பீடத்தில் அமர்ந்த நிலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். இச்சிற்பத்தில் மூத்ததேவியின் தலை உடைந்து காணப்படுகிறது. மாந்தனும் மாந்தியும் ஒரு காலை மடக்கியும் மற்றொரு காலைத் தொங்கவிட்ட படியும் அமர்ந்துள்ளனர் (சுகாசன அமர்வு). இவர்களின் உடல் ஒருபக்கமாகச் சாய்ந்துள்ளது. மாந்தியின் தலையில் கன்னிமாடம் போன்ற அமைப்பு உள்ளது. பண்டைய காலத்தில் இருந்தே வேளாண்மைக் கடவுளாகக் கருதப்படும் இந்தத் தவ்வை பொதுவாக வேளாண்மை சார்ந்த இடங்களில் காணப்படுவார்.
தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

புகைப்படங்கள்

ப.பிரதீப்

ப.பிரதீப்

ப.பிரதீப்