Kadhirvel Pudavu on Sanjeevi Hill, located to the east of Sundararajapuram village.
worship
2.5 feet tall, 3.5 feet wide.
Village Name
Sundarajapuram
District
Theni
கல்வெட்டுகள்
இல்லை
காலம் / அரசன்
சிற்ப அமைதிப்படி பொது ஆண்டு 9-10ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
இந்தச் சமணத் தீர்த்தங்கரரின் சிற்பம், இயற்கையாக அமைந்த ஒரு குகையில் இடம்பெற்றுள்ளது. இச்சமணத் தீர்த்தங்கரர், சிம்மாசனத்தின் மேல், தன் ஒரு காலை முழங்கால் வரை மடித்து, மற்றொரு காலைத் தொடையில் வைத்து அமர்ந்த நிலையில் (அர்த்த பத்மாசனம்) புடைப்புச் சிற்பமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். இத்தீர்த்தங்கரர் ஆடை ஏதும் அணியவில்லை. தீர்த்தங்கரரின் கைகள் தியான முத்திரையில் உள்ளன. மேலும், தீர்த்தங்கரரின் தலையைச் சுற்றி அரை வட்ட வடிவில் ஒளிவட்டம் காட்டப்பட்டுள்ளது. எனவே இவர் கண்களை மூடித் தியானத்தில் உள்ளார் எனலாம். சிற்பத்தின் இருபுறமும் சிங்கங்கள் தங்கள் பின்னங்கால்களை ஊன்றி நிற்கின்றன. சிற்பத்தின் மேல் பகுதியில் இரு உதவியாளர்களும் சாமரம் வீசிக்கொண்டு நின்றபடியுள்ளனர். சிற்பத்தில் முக்குடையும், மரக் கிளைகளும் உள்ள மேல் பகுதி உடைந்து காணப்படுகிறது. சிற்ப அமைப்பின்படி இது சமண மதத்தின் திகம்பரப் பிரிவைச் சேர்ந்த தீர்த்தங்கரர் சிற்பம் என்பது தெளிவாகிறது. சிற்பத்தின் இடப்பக்கக் கீழ்ப் பகுதியில் தலையில் சக்கரத்துடன் அமர்ந்த நிலையில் காணப்படும் உருவம் சிதைந்துள்ளது.
Inscription
No
Period / King
The sculpture is believed to be from the 9th - 10th Century CE
Additional Information
This sculpture of a Jain Tirthankara is located inside a naturally formed cave. The Tirthankara is depicted as a bas-relief sculpture seated on a simhāsanā, with one leg folded up to the knee and the other placed on the thigh (Ardha Padmasana/half-lotus posture). The Tirthankara is unclothed, and his hands are positioned in Dhyana Mudra (meditative posture). Around his head, a semicircular halo is carved, indicating his spiritual radiance. His eyes appear closed, suggesting he is in deep meditation. On either side of the sculpture, lions are shown standing on their hind legs. Above the sculpture, two attendants are depicted standing while fanning the Tirthankara with chāmarā (fly whisks/fan). The upper portion of the sculpture, which originally contained a triple umbrella (mukkudai) and tree branches, is now broken.
Based on the sculptural features, it is evident that this is a representation of a Tirthankara belonging to the Digambara sect of Jainism. In the lower left portion of the sculpture, a partially damaged figure can be seen seated with a chakra (wheel) above its head.