In a coconut grove located along the road from Thangammalpuram village to Varusanadu.
worship
3.5 feet in height, 2.5 feet in width.
Village Name
Thangammalpuram
District
Theni
கல்வெட்டுகள்
இல்லை
காலம் / அரசன்
பொது ஆண்டு 16-17ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
இந்தச் சிற்பத்தில் ஓர் ஆண் தனது இரு மனைவியருடனும் ஒரு பீடத்தின் மேல், ஒரு காலை மடக்கியும் மறு காலை கீழே தொங்கவிட்டபடியும் அமர்ந்த நிலையில் (சுகாசன அமர்வு) புடைப்புச் சிற்பமாகக் காட்சிப் படுத்தப்பட்டுள்ளான். எனவே இது ஒரு சதிக்கல்லாக இருக்கலாம். ஆண் தன் வலக்கையில் நீளமான ஆயுதம் ஏந்தியுள்ளான். அவனது இருபுறமும் உள்ள மனைவியரும் தங்கள் கைகளில் வட்ட வடிவப் பொருளைப் பிடித்துள்ளனர். ஆணும் அவனது மனைவியரும் காதணி. மாலைகள், கடகவளை ஆகிய அணிகலன்கள் அணிந்துள்ளனர். இவர்களுக்கு நீள்காதுகளும் தலையில் கொண்டையும் உள்ளன. நடுகல்லின் மேல்பகுதி, கூடாரம் போன்ற அமைப்பைக் கொண்டுள்ளது. இவ்வமைப்பின் நடுவில் காணப்படும் அலங்காரம் தேய்ந்துள்ளது. இச்சிற்பத்தில் காணப்படும் ஆண் ஏதேனும் வீரச்செயல் புரிந்து இறந்திருக்க வேண்டும். அதன் காரணமாக அவனது இரு மனைவியரும் சதி என்னும் உடன்கட்டை ஏறித் தங்கள் உயிரை மாய்த்திருக்கலாம். இம்மூவரின் நினைவாக இந்தச் சதிக்கல் எடுக்கப்பட்டுள்ளது.
Inscription
No
Period / King
The sculpture is believed to be from the 16th - 17th century CE
Additional Information
In this relief sculpture, a man is depicted as seated in sukhāsana posture (one leg folded and one leg dangling) on a pedestal with his two wives. Therefore, this could be a memorial stone indicating a sati sacrifice. The man holds a long weapon in his right hand. Both of his wives are holding circular objects in their hands. The man and his wives are adorned with ornaments such as earrings, necklaces and armlets (kadaga valai), and they have long ears and headgear. The upper part of the stone features a structure resembling a roof. The ornamentation in the facade of this roof has faded. It appears that the man may have died after performing some heroic act. As a result, his two wives, in their grief, may have committed Sati (self-immolation) by climbing onto his funeral pyre. This memorial stone has been erected in memory of the three individuals.