Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

நடுகற்கள் தொகுதி

Collection of Hero Stones

அமைவிடம்

கண்ணியம்பட்டி ஊருக்குள் செல்லும் பாதையில் இரண்டு நடுகற்கள் உள்ளன.


அளவு

சிற்பம் 1) உயரம் 3.8 அடி, அகலம் 4.2 அடி

சிற்பம் 2) உயரம் 3.8 அடி, அகலம் 4.2 அடி


வழிபாடு

ஆம்


ஊர்

கண்ணியம்பட்டி

மாவட்டம்

மதுரை

காலம் / அரசன்
பொது ஆண்டு 15ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
இடப்புறம் உள்ள முதல் நடுகல்லில் ஓர் ஆண் குதிரையில் அமர்ந்துகொண்டு, இடக்கையால் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்தபடியும், வலக்கையில் வாள் ஏந்தியபடியும் உள்ளான். இடப்பக்கம் அவன் மனைவி குடுவை மற்றும் பூ ஏந்தியபடி உள்ளார். இவர்களுக்கு நடுவில் குடையைப் பிடித்தபடி ஒருவர் நின்றுள்ளார். இரண்டாவது நடுகல்லில் உள்ள ஆண் குதிரையில் அமர்ந்தபடி இடக்கையால் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்தபடியும், வலக்கையில் வாளேந்தியும் உள்ளான். இவனது இருபுறமும் இரண்டு மனைவியர் உள்ளனர். ஊர் மக்கள், சிவராத்திரியன்று, இந்நடுகற்களுக்கு வெள்ளாடை அணிவித்துத் தேங்காய், பழம், பத்தி, சூடம் வைத்து வழிபாடு செய்கின்றனர். பதினைந்தாம் நூற்றாண்டைச் சார்ந்த இந்நடுகல், போரில் இறந்தவர்களுக்காக எடுக்கப்பட்டது என்கின்றனர் ஊர்மக்கள்.
தகவல்

முனைவர் இரத்தினகுமார்

புகைப்படங்கள்

விஜயகுமார்

விஜயகுமார்

விஜயகுமார்