Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

நடுகல்

Hero Stone

அமைவிடம்

செக்கானூரணியிலிருந்து உசிலம்பட்டி செல்லும் வழியில் உள்ள ஆதிசிவன் கோயிலுக்குள் நடுகல் அமைந்துள்ளது.


அளவு

4.5 அடி உயரம், 3 அடி அகலம்


வழிபாடு

ஆம்


ஊர்

ஆ.கொக்குளம்

மாவட்டம்

மதுரை

கதை
கருமாத்தூரிலிருந்து ஆ.கொக்குளத்தில் உள்ள தங்கள் மகள் வீட்டுக்கு வந்தவர்கள், படைவெட்டுக் காலத்தில் இறந்து போகின்றனர். தன் மாமனார் மாமியார் மீது அன்பு கொண்டிருந்த மருமகன் வைத்த நடுகல் இது என்கின்றனர் இப்பகுதி மக்கள்.
காலம் / அரசன்
பொது ஆண்டு 15ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
இந்த நடுகல் சிற்பத்தில் ஒரு வீரனும் அவனது மனைவியும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். வலக்கையில் வாளும் இடக்கையில் வளரியும் பிடித்தபடி உள்ள ஆண் உருவத்தின் வலப்புறத்தில் அவரின் மனைவியும் உள்ளார். மனைவி தன் இடக்கையில் பூ ஒன்றைப் பிடித்துள்ளார். இருவருக்கும் நீள்காதுகள் உள்ளன.
தகவல்

முனைவர் இரத்தினகுமார்

குறிப்புகள்
(தென்கல்லக நாட்டில் நடுகற்கள்). அருண் பேய்க்காமன்
புகைப்படங்கள்

ராஜவேலு

ராஜவேலு