Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

நடுகற்கள் தொகுதி

Collection of Hero Stones

அமைவிடம்

தும்மக்குண்டு கிராமத்தின் மேற்குப் பக்கமாக உடையாம்பட்டி செல்லும் வழியில் கண்மாய்க் கரையில் 4 நடுகற்கள் உள்ளன.


அளவு

சிற்பம் 1. இடப்புறத்திலிருந்து முதல் சிற்பம் 3.6 அடி உயரம் கொண்டது.

சிற்பம் 2. இடப்புறத்திலிருந்து இரண்டாவது சிற்பம் 3.8 அடி உயரம், 3.3 அடி அகலம் கொண்டது.

சிற்பம் 3. இடப்புறத்திலிருந்து மூன்றாவது சிற்பம் 3.6 அடி உயரம், 2.9 அடி அகலம் கொண்டது.

சிற்பம் 4. இடப்புறத்திலிருந்து நான்காவது சிற்பம் 4.2 அடி உயரம், 3 அடி அகலம் கொண்டது.


வழிபாடு

ஆம்


ஊர்

தும்மக்குண்டு

மாவட்டம்

மதுரை

கதை
நவாப் படையெடுப்பின்போது இங்கு வாழ்ந்த இனக்குழுக்கள் போராடி மடிந்துள்ளனர். அவர்களின் வம்சாவளிகள் அதை நினைவுகூரும் வகையில் நடுகல் எழுப்பி வழிபட்டு வருகின்றனர். வரி மற்றும் எல்லைப் பிரச்சனையில் ஆங்கன் மற்றும் இரட்டையன் என்னும் இருவர் மடிய, அவர்களின் மனைவிகள் உரிமையைக் கோருகின்றனர்.
கல்வெட்டுகள்
இல்லை
காலம் / அரசன்
பொது ஆண்டு 16-17ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
தும்மக்குண்டு கிராமத்தில் 4 நடுகற்கள் வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள அனைத்து ஆண் மற்றும் பெண் சிற்பங்களுக்கும் நீண்ட காதுகளும் தலையில் கொண்டையும் உள்ளன. இவற்றுள் இடப்புறம் உள்ள முதல் நடுகல்லில், ஓர் ஆண் தன் வலக்கையில் ஈட்டி ஏந்தியபடி, இடப்பக்க இடுப்பில் வளரி ஒன்றை வைத்துக்கொண்டு நின்றவாறு உள்ளான்.

இரண்டாவது நடுகல்லில் உள்ள ஆண் வலக்கையில் வாளை உயர்த்திப் பிடித்தவாறும் இடக்கையில் ஈட்டியைப் பிடித்தபடியும் நின்றுள்ளான். அவனது இடப்புறம் உள்ள அவன் மனைவி தன் வலக்கையில் சிறிய குடத்தை பிடித்துள்ளாள்.

மூன்றாவது நடுகல்லில் உள்ள ஆணின் வலக்கையில் வாளும் இடக்கையில் ஈட்டியும் உள்ளன. அவனது இடப்புறம் உள்ள அவன் மனைவி தன் கையில் சிறு குடத்தை வைத்துள்ளாள்.

நான்காவது நடுகல்லில் ஆணின் வலக்கையில் வாளும் இடக்கையில் ஈட்டியும் உள்ளன. அவனது இடப்புறம் உள்ள அவன் மனைவி, இடக்கையில் சிறு குடத்தை வைத்துள்ளாள்.
தகவல்

முனைவர் இரத்தினகுமார்

புகைப்படங்கள்

ஆய்வாளர் அருண் பேய்க்காமன்

ஆய்வாளர் அருண் பேய்க்காமன்

ஆய்வாளர் அருண் பேய்க்காமன்

ஆய்வாளர் அருண் பேய்க்காமன்