Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

நடுகல்

Hero Stone

அமைவிடம்

தும்மக்குண்டு அருகில் பிச்சம்பட்டி கிராமத்தின் காட்டுப் பகுதியில் உள்ள கோயிலின் வெளிப்புறமாக உள்ளது.


அளவு

3.7 அடி உயரம், 2.7 அடி அகலம்.


வழிபாடு

ஆம்


ஊர்

பிச்சம்பட்டி

மாவட்டம்

மதுரை

கதை
படைவெட்டுக் காலத்தில், (மாலிக்கபூர் காலத்திலிருந்து, ஆங்கிலேயர்கள் மதுரையைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த காலம் வரை நடைபெற்ற பல போர்களை இப்பகுதி மக்கள் படைவெட்டுக் காலம் என்கின்றனர்) முஸ்லிம் படை முன்னேறிச் சென்றபோது எதிர்த்து நின்று போர் புரிந்த சின்னாங்கி என்பவர் முதுகில் குத்துப் பெற்று இறந்ததைக் கேட்ட அவர் மனைவி தன் நாக்கைப் பிடுங்கி இறந்ததாகச் சொல்லப்படுகிறது. எனவே, அவர்களின் உறவினர்களும் ஊர்மக்களும் இவ்விருவருக்கும் நடுகல் வைத்தனர்.
கல்வெட்டுகள்
இல்லை
காலம் / அரசன்
பொது ஆண்டு 13ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
கணவன் மனைவி ஆகிய இருவரின் உருவமும் இந்நடுகல்லில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கணவன் வலக்கையில் வாளை உயர்த்திப் பிடித்தவாறு, இடக்கையில் வேல் வைத்துள்ளான். மனைவி தன் இடக்கையில் ஒரு குடத்தை ஏந்தியுள்ளாள். இருவருக்கும் நீண்ட காதுகளும் தலையில் கொண்டையும் உள்ளன. மாசிப்பச்சைத் திருவிழா (குலதெய்வ வழிபாட்டு நாள்) அன்று புத்தாடை உடுத்து, தேங்காய் பழம் வைத்து இந்நடுகல்லை மக்கள் வழிபடுகின்றனர்.
தகவல்

முனைவர் இரத்தினகுமார்

புகைப்படங்கள்

ஆய்வாளர் அருண்குமார்