In Karaiyampatti village, near Kallapatti in Usilampatti Taluk, this hero stone is located in a forest area.
worship
5 feet in height, 3.1 feet in width.
Village Name
Karaiyampatti
District
Madurai
கதை
முத்துத்தேவனின் மகனான கொப்புல்லாத் தேவன் சல்லிக்கட்டில் பெயர் பெற்றவர். ஒருமுறை தனியாளாக ஆநிரைகளைக் கவர்ந்து மாட்டின் மேல் அமர்ந்து வரும்போது மாடுகளின் உரிமையாளர் காவல்காரர்களை வைத்து ஈட்டியை எறியும்போது, ஈட்டி முதுகில் பாய்ந்து இவர் இறந்தார் என்று சொல்லப்படுகிறது. இவருக்கு நடுகல் நட்டு இவரது வம்சாவளிகள் வழிபட்டு வருகின்றனர்.
கல்வெட்டுகள்
இல்லை
காலம் / அரசன்
பொது ஆண்டு 15ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
இந்நடுகல்லில் சித்தரிக்கப்பட்டுள்ள ஆண், தன் வலக்கையில் ஈட்டியும், தன் இடுப்பில் இடக்கையையும் வாளையும் வைத்துள்ளான். இவரின் கழுத்து, காதுகள், கைகள் ஆகியவற்றில் அணிகலன்கள் உள்ளன. ஆநிரை கவர்தல் என்பது இனக்குழுக்களிடம் நீண்ட காலமாக இருந்துவரும் பழக்கமாகும். அவ்வாறு ஆநிரைகளைக் கவர்ந்து வரும்போது, மாடுகளின் உரிமையாளரின் ஈட்டி முதுகில் பாய்ந்து இவர் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இவரை இப்பகுதி மக்கள் ’கருப்பன்’ என்ற பெயரில் வழிபடுகின்றனர். தை மாதம், சிவ ராத்திரி மற்றும் இவரது வம்சாவளிகளுக்குறிய முக்கிய நாட்களில் இந்த நடுகல்லுக்கு வெள்ளாடை (கொசவம்) உடுத்தி; வாழைப்பழம், தேங்காய், சூடம், பத்தி போன்றவற்றைக் கொண்டு வழிபடுகின்றனர்.
Story
Muthuthevar’s son, Koppullath Thevan, was renowned for his expertise in Jallikattu. It is said that on one occasion, he single-handedly captured a herd belonging to a rival tribe (Ānirai Kavardhal). While returning with the herd, riding on one of the animals, he was attacked by the herd’s owners and their guards. A spear was thrown, piercing his back and causing his death. To honor his memory, a hero stone was erected, and his descendants continue to worship it to this day.
Inscription
No
Period / King
The sculpture is believed to be from the 15th century CE
Additional Information
The man depicted on this hero stone is shown holding a spear in his right hand and placing his left hand along with a sword on his waist. He is adorned with ornaments on his neck, ears, and hands. Ānirai Kavardhal (capturing of cattle) has been a long-standing practice among ethnic groups of ancient Tamil country. It is said that during one such raid, while stealing cattle, the owner’s spear struck his back, leading to his death. The local people worships him as 'Karuppan'. During the Tamil month of Thai, on Shivaratri, and on other days significant for his descendants, the hero stone is draped with a white cloth (Kosavam) and offered worship with items like bananas, coconuts, incense, and lit camphor.
தகவல்
முனைவர் இரத்தினகுமார்
Details
Dr. N. Rathnakumar
குறிப்புகள்
ஆய்வாளர் அருண் பேய்க்காமன் (தென்கல்லக நாட்டில் நடுகற்கள்)
Reference
Researcher Arun Peykkaman (Hero Stones in Thenkallaka Nadu)