Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

வழிபாட்டுத் தூண் கல்

Worship Pillar Stone

அமைவிடம்

கூத்திப்பாறை கிராமம் கிழக்குப் பகுதியில் கண்மாய்க் கரையின் அருகே ஸ்ரீ ஜெய ஆஞ்சநேயர் கோயில்


அளவு

4 அடி உயரம், 2 அடி அகலம்


வழிபாடு

ஆம்


ஊர்

கூத்திப்பாறை

மாவட்டம்

விருதுநகர்

கதை
கூத்திப்பாறை என்ற ஊர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டத்தில் அமைந்துள்ளது. நாட்டுப்புறக் கலைஞர்களான கூத்தர்கள் இப்பகுதியில் இருந்ததால் இவ்வூர் ’கூத்துப்பாறை’ என அழைக்கப்பட்டதாக இப்பகுதி மக்களிடம் கருத்து நிலவுகிறது.
கல்வெட்டுகள்
ஆம்
கல்வெட்டின் மொழி / எழுத்து
தமிழ்
காலம் / அரசன்
நாயக்கர் காலம்
கூடுதல் விவரங்கள்
இந்த வழிபாட்டுத் தூண்கல்லில் 4 புடைப்புச் சிற்பங்களும் ஒரு கல்வெட்டும் காணப்படுகிறது. இச்சிற்பத்தின் முன் பகுதியில் மேலே ஒரு மாடம் போன்ற அமைப்பினுள் விநாயகர் உருவமும் கீழே ஆஞ்சநேயர் உருவமும் செதுக்கப்பட்டுள்ளன. ஒரு குச்சியின் இருபுறமும் பைகளைக் கட்டித் தோளில் சுமந்து செல்வது போல ஆஞ்சநேயரின் இந்தப் புடைப்புச்சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்தில் மேல் வலம் மற்றும் இடப்பக்கத்தில் சங்கு சக்கரம் உள்ளிட்ட சின்னங்கள் காணப்படுகின்றன. இத்தூணின் இடப்புறத்தின் கீழே இவ்வூர்த் தலைவராகக் கருதப்படும் நாயக்கரின் சிறிய உருவம், கைகூப்பித் தலையில் கொண்டையுடன் காணப்படுகிறது. இச்சிற்பத்தின் பின்பகுதியில் ஒரு தமிழ்க் கல்வெட்டு சிதைந்த நிலையில் இடம்பெற்றுள்ளது. அதில் இவ்வூரின் பெயர் ’கூத்திப்பாறை' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இவ்வூர்த் தலைவனின் பெயர் சிதைந்து 'நாயக்கர்' என்ற ஒரு சொல் மட்டும் கல்வெட்டில் காணப்படுகின்றது.

இத்தூணின் வலப்பக்கத்தில் திரிசூல வடிவம் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் ஒரு புகழ் பெற்ற சிவாலயம் இருந்திருக்கலாம் என்றும், அதற்குக் கொடுக்கப்பட்ட தானங்கள் பற்றிய செய்தி இங்குக் கல்வெட்டாக வெட்டி வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் அறிஞர்கள் சிலர் கருதுகின்றனர். இக்கருத்துக்கேற்ப இக்கோவிலுக்கு அருகில் இராமநாதபுரம் தேவஸ்தானத்திற்குக் கட்டுப்பட்ட ஒரு சிறு சிவன் கோவில் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. இந்த வழிபாட்டுத் தூண்கல் தமிழ்நாட்டில் அரியதாகக் காணப்படும் அம்சமாகும். மேலும் தொல்லியல் அறிஞர்கள் சிலர் இந்தத் தூண் ஒரு வணிகச் சின்னமாக இருந்திருக்கலாம் என்கின்றனர்.
தகவல்

முனைவர் செல்லப்பாண்டியன்

புகைப்படங்கள்

மணிகண்டன்

மணிகண்டன்

மணிகண்டன்

மணிகண்டன்