கோவிலாங்குளம் அம்பலப்ப சுவாமி கோவில் உருவாக்கப்பட்டபோது உலோகத்தினாலான தீர்த்தங்கரர் திருமேனியும், இயக்கி திருமேனியும் செய்யப்பட்டதாக இங்குக் காணப்படும் கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது. ஆனால் இப்போது மூன்று சமணக் ’கற்சிற்பங்கள்’ மட்டுமே இவ்வளாகத்தில் காணப்படுகின்றன.
கல்வெட்டுகள்
இல்லை
காலம் / அரசன்
பொது ஆண்டு 11 - 12ஆம் நூற்றாண்டு , முதலாம் குலோத்துங்கச் சோழன்.
கூடுதல் விவரங்கள்
கோவிலாங்குளம் கிராமத்தில் அம்பலப்ப சுவாமி என்னும் சமணக் கோயில் காணப்படுகிறது. இக்கோயிலுக்கு ’முக்குடையார் கோயில்’ என்ற பெயரும் இருந்துள்ளது என்ற செய்தி இவ்வூரில் காணப்படும் கல்வெட்டுக்களின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. இங்கு 3 சமணத் தீர்த்தங்கரர் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. மூவரும் அமர்ந்த நிலையில் (அர்த்த பரியங்காசன கோலத்தில்) , கைகளைத் தியான முத்திரையில் வைத்து அமர்ந்துள்ளனர். இவர்களுக்கு நீள் காதுகள் உள்ளன. இடது மற்றும் வலதுபுறம் உள்ள தீர்த்தங்கரர்களின் தலையின் மேல் குடை காணப்படுகிறது. நடுவிலுள்ள சிற்பம் பெரியதாக உள்ளது. இவருக்கு முக்குடையோ இயக்கியரோ காட்டப்படவில்லை. இவருக்கு இடப்புறம் உள்ள தீர்த்தங்கரர் சிற்பத்தில் முக்குடையும் இரு இயக்கியரும் காட்டப்பட்டுள்ளன. வலப்புறமுள்ள சிறிய சிற்பத்தில் ஓர் அடுக்குக் குடையுடன் இயக்கியர்கள் இல்லாமல் தீர்த்தங்கரர் காணப்படுகிறார். இந்தச் சமணத் தீர்த்தங்கரர் சிற்பங்கள் வழிபாட்டில் உள்ளன.
Story
When the Kovilankulam Ambalappa Swami Temple was established, metal idols of Tirthankaras and Yakshi were also made, as revealed by the inscriptions found here. However, at present, only three Jain stone sculptures remain within the temple premises.
Inscription
No
Period / King
The sculpture is believed to be from the 11th-12th century CE, Kulothunga Chola I
Additional Information
In the village of Kovilankulam, there is a Jain temple known as Ambalappa Swami Temple. Inscriptions found in this village reveal that this temple was also known as "Mukkudaiyār Temple." Three Jain Tirthankara sculptures are present here. All three are seated in the Ardha Paryankasana posture with their hands in the Dhyana Mudra. They have elongated ears. Umbrellas are seen above the heads of the Tirthankaras on the left and right sides. The central sculpture is the largest among them, and it does not have a representation of triple umbrella (Mukkudai) or attendant deities (Yakshas). The Tirthankara sculpture to its left is adorned with a triple umbrella and is flanked by two Yakshas. The smaller sculpture on the right features a single-tiered umbrella but lacks Yakshas. These Jain Tirthankara sculptures continue to be worshipped today.