அமைவிடம்
சிற்பம் திருக்கோவில் கல்யாண மண்டபத்தில் வலப்பக்கத்தில் அமைந்துள்ளது.
அளவு
7 அடி உயரம், 4 அடி அகலம்
கதை
வாமன அவதாரம் என்பது மகாவிஷ்ணுவின் ஐந்தாம் அவதாரம் ஆகும். மலை நாட்டை ஆண்ட மகாபலி சக்கரவர்த்தி அரக்கர் குலத்தைச் சேர்ந்தவன். அவன் ஒருமுறை உலகை வெல்ல யாகம் ஒன்று நடத்தத் திட்டமிட்டான். மகாபலியின் ஆணவத்தை அடக்கக் குள்ள அந்தணன் (வாமனன்) வடிவெடுத்துத் திருமால் யாகச் சாலைக்கு வந்து அவனிடம் மூன்றடி நிலம் தானமாகத் தரும்படி கேட்டார். மிகுந்த செருக்குடன் இருந்த மகாபலி தர ஒப்புக்கொண்டான். பகவான் திரிவிக்கிரமர் வடிவு எடுத்து வானை ஒரு காலாலும், மண்ணுலகை ஒரு காலாலும் அளந்தபின், மூன்றாமடியை எங்கு வைப்பது என்று கேட்டார். வந்திருப்பவர் மகாவிஷ்ணுதான் என்று உணர்ந்த மகாபலி, தனது தலையின்மேல் வைக்குமாறு கேட்டுக்கொண்டான். விஷ்ணு அவனுக்கு முக்தியளித்து அவனது அகந்தையை ஒழித்தார்.
ஊர்
அழகர் கோவில்
மாவட்டம்
மதுரை