Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

நடுகற்கள் தொகுதி

Collection of Hero Stones

அமைவிடம்

குருவித் துறையின் வைகை ஆற்றை ஒட்டி


வழிபாடு

ஆம்


கல்வெட்டுகள்

இல்லை


ஊர்

குருவித்துறை

மாவட்டம்

மதுரை

காலம் / அரசன்
வரலாற்றுக் காலம்
கூடுதல் விவரங்கள்
இவ்விடத்தில் இரண்டு நடுகற்கள் காணப்படுகின்றன. இவை வீரச் செயல்களைச் செய்து இறந்தவர்களுக்காக எடுக்கப்பட்ட நடுகற்களாகும். ஒரு நடுகல் பீடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு நடு கற்களிலும் ஒரே மாதிரியான புடைப்புச் சிற்ப அமைப்பு காணப்படுகிறது. இந்த நடுகற்கள் இரண்டு அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மேலடுக்கின் நடுப்பகுதியில் ஓர் ஆண் நின்று கொண்டிருக்கிறார். அவரது இரு புறங்களிலும் இரண்டு பெண்கள் காணப்படுகின்றனர். கீழ் அடுக்கில் குதிரையின் மேல் அமர்ந்துள்ள வீரனின் புடைப்புச் சிற்பம் காட்டப்பட்டுள்ளது. பீடத்தின் கீழ் அமைந்துள்ள நடுகல்லின் மேல் அடுக்கில் ஒரு சிறிய குழந்தையின் வடிவமும் செதுக்கப்பட்டுள்ளது. இக்குழந்தையின் அருகில் காணப்படும் ஆண் வில் மற்றும் கதை ஆகிய ஆயுதங்களை ஏந்தியுள்ளார். இந்த நடுகல்லை இவ்வூர் மக்கள் தற்போது தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
தகவல்

முனைவர் மகாலிங்கம்

புகைப்படங்கள்

P.பிரியா

P.பிரியா

P.பிரியா