Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

வழிபாட்டுத் தூண் கல்

Worship Pillar Stone

அமைவிடம்

அழகன்பட்டி


அளவு

4 அடி உயரமும், 1.5 அடி அகலமும், 0.5 அடி கனமும் கொண்டுள்ளது


வழிபாடு

இல்லை


ஊர்

அழகன்பட்டி

மாவட்டம்

திண்டுக்கல்

கல்வெட்டுகள்
இல்லை
காலம் / அரசன்
பொது ஆண்டு 17ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்
கூடுதல் விவரங்கள்
புடைப்புச் சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த வழிபாட்டுத் தூண் கல் மண்ணில் புதையுண்ட நிலையில் காணப்படுகிறது. இந்த வழிபாட்டுத் தூண்கல்லின் நான்கு பக்கங்களும் நான்கு அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் இரு பக்கங்கள் அகலமாகவும் இரு பக்கங்கள் குறுகலாகவும் காணப்படுகின்றன. அகலமான முதல் பக்கத்தின், மேல் அடுக்கில் பூர்ணக் கலசத்தின் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. இப்பக்கத்தின் இரண்டு மற்றும் மூன்றாம் அடுக்குகளில், மாடு ஒன்றை மனிதன் ஒருவன் குச்சியால் மிரட்டுவது போன்ற காட்சி காணப்படுகிறது. இந்தப் புடைப்புச் சிற்பம் மாடு மேய்க்கும் சமூகத்தைச் சித்தரிப்பதாக இருக்கலாம். அகலமான இரண்டாவது பக்கத்தின் மேல் பகுதியில் சிவலிங்கத்தின் இருபுறமும் சூரியனும் சந்திரனும் செதுக்கப்பட்டுள்ளன. இதற்குக் கீழ் உள்ள அடுக்கில் 5 பெண்கள் தங்கள் வலக்கையில் மொட்டாக இருக்கும் பூவை ஏந்தி நிற்கின்றனர். இதற்குக் கீழுள்ள அடுக்கில் ஓர் ஆண் மற்றும் இரண்டு பெண்கள் கைவணங்கி நிற்கின்றனர்.

குறுகலான முதல் பக்கத்தின் மேலடுக்கில் சங்கு போன்ற உருவம் காணப்படுகிறது.

பிற அடுக்குகளில் மாடுகள் மற்றும் மனித உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. நான்கு பக்கங்களின் கீழடுக்குச் சிற்பங்கள் தெளிவற்ற நிலையில் உள்ளன. ஏனெனில் இவை பூமியில் புதைந்துள்ளன. இச்சிற்பங்களில் காணப்படும் உடை, ஆபரணங்கள் மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றின் அடிப்படியில் இவை, சுமார் 350 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. கால்நடைச் சமூகத்தைச் சேர்ந்த மக்களால் இச்சிற்பத்தூண் எழுப்பப்பட்டு வணங்கப்பட்டிருக்கலாம். எனினும், தற்போது இவ்விடத்தில் வசிக்கும் மக்களிடையே இச்சிற்பத்தூணை வழிபடும் வழக்கம் காணப்படவில்லை.
தகவல்

க.த. காந்திராஜன்

புகைப்படங்கள்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்