Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

நடுகல்

Hero Stone

அமைவிடம்

மாரியம்மன் கோயில் பின்புறம்


அளவு

சுமார் 4 அடி உயரம், 2 அடி அகலம்


வழிபாடு

ஆம்


ஊர்

திருவில்லிப்புத்தூர்

மாவட்டம்

விருதுநகர்

கதை
இப்பகுதியில் வீரன் ஒருவன் குதிரைச் சவாரி செய்து வரும்போது இந்த இடத்தில் வந்தவுடன் குடல் சரிந்து இறந்து விட்டதாக ஊர்மக்கள் கூறுகின்றனர். அந்த வீரன் அப்படியே இங்குக் கல்லாக மாறிவிட்டதாகவும் நம்புகின்றனர். எனவே உடல் உபாதைகள் ஏதேனும் இருப்பின் இங்கு வந்து வழிபட்ட பிறகு நலம் பெறுவதாக நம்புகின்றனர்.
கல்வெட்டுகள்
இல்லை
காலம் / அரசன்
பொது ஆண்டு 17ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
இந்த நடுகல் சிற்பத்தில் காணப்படும் வீரன் தன் வலக்கையில் சிறிய நீள்முனைத் துப்பாக்கியையும் இடக்கையில் கேடயத்தையும் ஏந்தியவாறு புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளான். காதணிகள், கடக வளை, தண்டை மற்றும் முழங்கால் அளவு ஆடையும் அணிந்துள்ளான். இந்நடுகல்லைச் சுற்றி இப்போது கோவில் போன்று அமைப்பு செய்யப்பட்டுள்ளது. இங்குச் சனிக்கிழமைகள் மற்றும் மாதத்தில் ஒரு நாள் படையல் வைத்து வழிபாடு செய்கின்றனர்.
தகவல்

முனைவர் கந்தசாமி

புகைப்படங்கள்

கந்தசாமி

கந்தசாமி