The northern part of Palavanatham is also known as Vadakku Patti.
worship
4 feet in height, 2 feet in width.
Village Name
Palavanatham
District
Virudhunagar
கதை
விருதுநகர் மாவட்டத்தில் குண்டாற்றங்கறையில் பொது ஆண்டு எட்டு - பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண மதம் தொடர்பான பல்வேறுச் சின்னங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாகப் பாலவநத்தம் என்ற ஊரின் வடக்குப் பகுதியில் இந்தத் தீர்த்தங்கரர் சிற்பம் காணப்படுகிறது.
கல்வெட்டுகள்
இல்லை
காலம் / அரசன்
பொது ஆண்டு 9-10ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
இந்தச் சிற்பம் சமணத் தீர்த்தங்கரரின் சிற்பமாகும். இச்சிற்பத்தில் காணப்படும் தீர்த்தங்கரர் அமர்ந்த நிலையில் (அர்த்த பரியங்காசனம்) உள்ளார். இவருக்கு நீள் காதுகள் உள்ளன. தலைக்கு மேல் மரமும் அதன்மேல் முக்குடையும் காட்டப்பட்டுள்ளன. இவருக்குப் பின்புறம் தோரணங்களும், இரண்டு சாமரம் வீசுபவர்களும், சிம்மம் போன்ற உருவங்களும் புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளனர். இந்தச் சிற்பத்தை இவ்வூர் மக்கள் காவல் தெய்வமாகக் கருதி தற்போது வழிபடுகின்றனர். ஒரு சிலர் இதை ஐயனார் என்றும், ஒரு சிலர் கருப்பசாமி என்றும் பெயர்சூட்டி வழிபடுகின்றனர்.
Story
Along the banks of Kundaaru river of Virudhunagar district, various Jain religious symbols dating back to the 8th–10th century CE have been discovered. As a continuation of these findings, a sculpture of a Tirthankara has been found in the northern part of a village called Palavanatham.
Inscription
No
Period / King
The sculpture is believed to be from the 9 - 10 century CE
Additional Information
This relief sculpture represents a Jain Tirthankara. In this depiction, the Tirthankara is seated in the Ardha Paryankasana posture. He has elongated ears, a triple umbrella (mukkudai) and a tree are carved above his head. Behind him, ornamental toranas, two attendants fanning him with chāmarā (fly whisks/fan), and carved reliefs of lion like figures are present. The local villagers worship this sculpture as a guardian deity. Some refer to it as Ayyanar, while others worship it under the name Karuppasamy.