Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

காவல் வீரன் நடுகல்

Hero Stone of a Guardian Warrior

அமைவிடம்

தோப்பூர்


அளவு

3 அடி உயரம்


வழிபாடு

ஆம்


ஊர்

தோப்பூர்

மாவட்டம்

விருதுநகர்

கதை
இச்சிற்பத்தில் காணப்படும் வீரன் ஊர்க்காவலில் ஈடுபட்டு வீர மரணம் அடைந்ததாக நம்பப்படுகிறது. எனவே, இச்சிற்பத்தை இப்பகுதி மக்கள் ஊர்க்காவல் தெய்வமாக வணங்குகின்றனர்.
கல்வெட்டுகள்
இல்லை
காலம் / அரசன்
பொது ஆண்டு 17ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
இந்த நடுகல் சிற்பத்தில் காணப்படும் வீரன் தன் இருகைகளையும் குவித்து, வணக்கம் செலுத்துவதுபோல நின்றுகொண்டிருக்கிறான். இந்தச் சிற்பம் தனிப் பீடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ளது. தலையில் கொண்டை கட்டியிருக்கும் இவ்வீரன் தன் நெற்றி, கழுத்து, கைகள், இடுப்பு ஆகியவற்றில் அணிகலன்கள் அணிந்துள்ளான். இவன் கணுக்கால் வரை நீளும் ஆடையுடுத்தி உள்ளான். வீரனது இடக்கால் பக்கத்தில் சிறிய நாய் போன்ற உருவம் காட்டப்பட்டுள்ளது. எனவே, இவன் ஊரைக் காவல்காக்கும் பணியின்போது இறந்திருக்கலாம் என்றும், அதனால் இவனுக்கு ஊர்மக்கள் நடுகல் அமைத்திருக்கலாம் என்றும் கருத வாய்ப்புண்டு.
தகவல்

முனைவர் செல்லப்பாண்டியன்

புகைப்படங்கள்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

காணொலி

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.