Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

வில்வீரன் நடுகல்

Archer's Hero stone

அமைவிடம்

காரியாபட்டியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் மந்திரி ஓடை கிராமத்தின் மையத்தில்.


அளவு

4 அடி உயரம், 2அடி அகலம்


வழிபாடு

ஆம்


ஊர்

மந்திரிஓடை

மாவட்டம்

விருதுநகர்

கதை
ஊரின் காவல் வீரனாக கருதப்படுவதால் மந்திரி ஓடை கிராமத்தில் மையத்தில் வைத்து வழிபட்டு வருகின்றன.
கல்வெட்டுகள்
இல்லை
கல்வெட்டின் மொழி / எழுத்து
இல்லை
காலம் / அரசன்
17ம் நூற்றாண்டு/ நாயக்கர் காலம்
கூடுதல் விவரங்கள்
வில்வீரன் நடுகல்லானது மந்திரிஓடை கிராமத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. நான்கடி உயரமும் இரண்டடி அகலமும் கொண்ட பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இவ்வீரன் நின்ற கோலத்தில் இடது கையில் வில்லினை பிடித்தபடி கம்பீரமாக வடிக்கப்பட்டுள்ளது. மேலும் தலைப்பகுதி சரிந்த கொண்டையும், நீண்ட காதுகளும், மார்பில் ஆபரணமும், மேலாடை இன்றி கீழாடை மட்டும் அணிந்தவாறு நேர்த்தியுடன் வடிக்கப்பட்டுள்ளது. இவர் 17 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் ஏதேனும் போரில் ஈடுபட்டு வீரமரணம் அடைந்திருக்க வேண்டும். அவரின் நினைவாக நடுகல் எடுத்து வழிபட்டு வருகின்றனர்.
தகவல்

முனைவர் செல்லப்பாண்டியன்

புகைப்படங்கள்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

காணொலி

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்