Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

ஊர் காவல் வீரன் நடுகல்

Hero stone for a Guardian Warrior

அமைவிடம்

சீலையம்பட்டி முத்தாலம்மன் கோவில் தெருவில் முத்தையா என்பவரின் தோட்டத்தில் உள்ளது.


வழிபாடு

ஆம்


காலம் / அரசன்

பொது ஆண்டு 17 -18 ஆம் நூற்றாண்டு.


ஊர்

சீலையம்பட்டி

மாவட்டம்

தேனி

கூடுதல் விவரங்கள்
இந்த நடுகல்லில் காணப்படும் வீரன், தன் வலக்கையில் அரிவாள் போன்ற ஆயுதத்தை உயர்த்திப் பிடித்துள்ளான். தன் இடக்கையை இடது தொடையில் வைத்தவாறு கம்பீரமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளான். வீரன் கையணிகள் மற்றும் கழுத்தணிகள் அணிந்துள்ளான். வீரனின் இடக்கையில் சிலம்பு போன்ற ஒரு பொருள் காணப்படுகிறது. இந்நடுகல் வீரனை இப்பகுதி மக்கள் மேகவர்ண கருப்பு, சோனை முத்து கருப்பு, தலையாளிக் கருப்பு, மலைக்கருப்பு போன்ற பெயர்களில் தங்கள் ஊரைக் காக்கும் காவல் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
அளவு
3 அடி உயரம்
தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

புகைப்படங்கள்

ப பிரதீப்