அரிகண்டம் என்பது பெண் தெய்வமான கொற்றவையின் முன்னால், வேண்டுதலை நிறைவேற்ற, தன் தலையைத் தானே அறுத்துப் பலி கொடுப்பதாகும். சில வீரக்கல் சிற்பங்களில் தனது இடது கையினால் முடியைப் பிடித்து வலது கையினால் கழுத்தை வெட்டும் காட்சி காணப்படுகிறது. இம்மரபு தமிழகத்தில் தொன்று தொட்டு இருந்து வந்துள்ளது என்ற குறிப்புகளும் சங்க இலக்கியங்களில் உள்ளன,
கல்வெட்டுகள்
இல்லை
காலம் / அரசன்
பொது ஆண்டு 16ஆம் நூற்றாண்டு, நாயக்கர் காலமாக இருக்கலாம்.
கூடுதல் விவரங்கள்
இந்த சிற்பம் ஒரு நடுகல் சிற்பமாகும். இது ’அரிகண்டம்’ எனப்படும் காணிக்கை செலுத்தி இறந்தவருக்காக எடுக்கப்பட்ட நடுகல்லாகும். தன் தலையைத் தானே அறுத்து, தன் உயிரைக் கொற்றவைக்கு (பெண் தெய்வம்) காணிக்கையாக செலுத்தும் இந்த வழக்கமே அரிகண்டம் எனப்படும். இந்த சிற்பத்தில் காணப்படும் வீரன், தன் வலது கையில் கூர்மையான வாளைத் தன் கழுத்தை நோக்கி பிடித்துள்ளான். பொதுவாக அரிகண்ட நடுகற்களில் உள்ள வீரர்கள் தங்கள் மறுகையால் தங்கள் தலையை இழுத்து பிடித்திருப்பர். ஆனால் இச்சிற்பத்தில் இடதுகை இடுப்பில் உள்ளது. வீரன் தன் இடுப்பில் குறுவாள் அல்லது கட்டாரி போன்ற ஆயுதத்தை வைத்துள்ளான். வீரனின் நீள்காதுகள், கொண்டை, அணிகலன்கள் மற்றும் ஆடை ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது இது நாயக்கர் காலத்தைச் சேர்ந்த/ பொது ஆண்டு 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல்லாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. போரில் தனது நாடு வெற்றி பெறவேண்டும் என்றெண்ணிய வீரன் ஒருவன் கொற்றவைக்குத் தன்னைப் பலிகொடுத்திருக்கலாம். இச்சிற்பத்தை இவ்வூர் மக்கள் கருப்பசாமி என்றும், காவல் தெய்வம் என்றும் வழிபடுகின்றனர்.
Story
Arikandam is the act of sacrificing oneself to fulfill a wish before the goddess Kotravai. In some Veerakkal sculptures, one can see the figure holding the hair with his left hand and cutting the neck with his right hand. This tradition existed in Tamil Nadu since ancient times as is evidenced by the references in Sangam literature.
Inscription
No
Period / King
16th century CE, probably Nayak period.
Additional Information
This is a hero-stone sculpture. This hero-stone was erected for a deceased hero who sacrificed himself by offering his head called 'Arikandam'. This custom of cutting off one's own head and offering one's life to the goddess (female deity) is called Arikandam. Usually, the figure of warrior in the Arikandam hero-stone holds his head with one hand or ties it in one place, and cuts off his head with the other hand with a sword. But, the hero seen in this sculpture is holding a sharp sword in his right hand towards his neck and the left hand is on the hip. The hero is holding a weapon like a short sword or dagger on his hip. Judging by the hero's long swords, hairpins, ornaments and clothes, it is believed that this hero-stone may be from the Nayak period /16th century AD. A hero who wanted his country to win in a war may have sacrificed himself to the goddess. The people of this village worship this sculpture as Karuppasami and as a guardian deity.