Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

சமண தீர்த்தங்கரர் சிற்பம்

Sculpture of Jain Tirthankara

அளவு

3அடி உயரம், 3அடி அகலம்


வழிபாடு

ஆம்


கல்வெட்டுகள்

இல்லை


ஊர்

மணவராயனேந்தல்

மாவட்டம்

விருதுநகர்

காலம் / அரசன்
பொது ஆண்டு 10 ம் நூற்றாண்டு, பாண்டியர் காலம்.
கூடுதல் விவரங்கள்
இந்த சமண தீர்த்தங்கரர் சிற்பத்தில் தீர்த்தங்கரரின் தலைக்கு மேல் முக்குடையும், தலையைச் சுற்றி பிரபாவளியும், நீள்காதுகளூம், தோலுக்கு இருபுறமும் சாமரம் வீசுபவர்களும் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. சாமரம் வீசுபவர்கள் பத்ர குண்டலம் மற்றும் கரண்டமகுடம் போன்றவற்றை அணிந்துள்ளனர். சிற்பத்தின் கீழ் பாதி மண்ணில் புதைந்துள்ளது. இச்சிற்பம் ‘அமணசாமி’ என்று இப்பகுதி மக்களால் அழைக்கப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது. இச்சிற்பத்தின் வடிவமைப்பை வைத்து இது பொது ஆண்டு 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும், இச்சிற்பம் அமைந்துள்ள பகுதியின் அருகே திருச்சுழி, பாறைக்குளம், சென்னிலைகுடி, கீழ் இடையங்குளம் போன்ற பகுதிகளிலும் சமண சிற்பங்கள் கிடைத்துள்ளன. இவற்றை வைத்து பார்க்கும் போது இப்பகுதியில் சமணர்கள் அதிக அளவில் வாழ்ந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. அதுமட்டுமின்றி பொது ஆண்டு 10 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்கள் சமண மதத்தை ஆதரித்திருக்கலாம் என்றும் சில அறிஞர்கள் கருதுகின்றனர்.
தகவல்

முனைவர் செல்லப்பாண்டியன்

புகைப்படங்கள்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

காணொலி

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்