Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

மாலையம்மன் நினைவுத்தூண்

Mālaiamman Workship Pillar

அமைவிடம்

தேவாரம் ஊருக்கு மேற்குப் பக்கமாக உள்ள சாலைத் தெரு என்ற பகுதியில் காணப்படுகிறது.


அளவு

8 அடி உயரம்


வழிபாடு

இல்லை


ஊர்

தேவாரம்

மாவட்டம்

தேனி

கல்வெட்டுகள்
இல்லை
காலம் / அரசன்
பொது ஆண்டு 17ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்.
கூடுதல் விவரங்கள்
இவ்விடத்தில் சுமார் 8 அடி உயரம் கொண்ட இரு நினைவு தூண்கள் காணப்படுகின்றன. இந்நினைவு தூண்களின் 4 பக்கங்களும் 6-8 அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டு அவற்றில் புடைப்புச் சிற்பங்கள் வெட்டப்பட்டுள்ளன. பொதுவாக இப்பகுதியில், இவ்வகை நினைவுத் தூண்களை ’மாலையம்மன் என்ற பெயரில் அழைப்பது வழக்கம். ஒவ்வொரு பக்கமும் உள்ள அடுக்குகளில் குதிரைவீரர்கள், வில் வீரர்கள், அவர்களை வரவேற்கக் காத்திருப்பவர்கள், பல்லக்குத் தூக்கிகள், புராணக்கதைகள் மற்றும் பிற நிகழ்வுகளும் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. தூணின் மேல்பகுதி, கோயில் விமானத்தின் மேலடுக்கில் காணப்படும் சிகரம் போன்ற அமைப்பைக் கொண்டுள்ளது.
தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

புகைப்படங்கள்

ம. ரேவன்

ம. ரேவன்

காணொலி

ம. ரேவன்