Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

வில்லியார் நடுகல்

Archer's Hero stone

அமைவிடம்

போடிநாயக்கனூரில் இருந்து தேனி செல்லும் சாலையில் உள்ள ஒத்த வீடு என்ற சிறு குடியிருப்பு பகுதிக்கு தெற்கு பக்கமுள்ள நிலம் ஒன்றில் உள்ளது.


அளவு

3.5 அடி உயரம், 2 அடி அகலம்.


காலம் / அரசன்

பொது ஆண்டு 14- 15 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்.


ஊர்

கோடாங்கிபட்டி, ஒத்த வீடு

மாவட்டம்

தேனி

கூடுதல் விவரங்கள்
இது வில்வீரன் ஒருவனுக்காக எடுக்கப்பட்ட நடுகல் என்பதால் இதை வில்லியார் நடுகல் என்கின்றனர். நடுகலில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ள வீரன் தன் வலக்கையில் வாளும் இடக்கையில் வில்லும் பிடித்தபடி திரிபங்க நிலையில் நின்றகிறான். மேலும் வீரனுடைய முதுகில் அம்பு கூடையும், கீழ் ஆடையாக மரவுரி அடையும் காட்டப்பட்டுள்ளது.
தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

புகைப்படங்கள்

சி.மாணிக்கராஜ், பிரதீப்

காணொலி

சி.மாணிக்கராஜ், பிரதீப்