Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

குதிரை வீரன் நடுகல்

Horse-mounted Warrior's Hero Stone

அமைவிடம்

தேவதானப்பட்டியில் இருந்து மூங்கில் அன்னை காமாட்சி அம்மன் கோயில் செல்லும் சாலையில் உள்ளது.


வழிபாடு

ஆம்


காலம் / அரசன்

பொது ஆண்டு 18 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்.


ஊர்

தேவதானப்பட்டி

மாவட்டம்

தேனி

கூடுதல் விவரங்கள்
இந்நடுகல்லில் காணப்படும் வீரன் குதிரையின் மேல் அமர்ந்தவாறு புடைப்பு சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளான். வீரன் தன் வலக்கையில் ஈட்டியையும் இடக்கையால் குதிரையின் கடிவாளத்தையும் பிடித்துள்ளான். குதிரை தன் முன்னங்கால்களை உயர்த்தியவாறு காணப்படுகிறது. குதிரை வீரன் ஒருவனுடைய வீர மரணத்தை நினைவுபடுத்தும் விதமாக இந்த நடுகல் எடுக்கப்பட்டிருக்கலாம். இந்நடுகல் தற்போது திறந்த வெளி வளாகத்தில் வைக்கப்பட்டு ஊர் காக்கும் காவல் தெய்வமாகவும் அய்யனாராகவும் வழிபடப்பட்டு வருகிறது. இச்சிற்பத்தின் அருகில் விநாயகர் சிற்பமும் காணப்படுகிறது.
அளவு
2.5 அடி உயரம்
தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

புகைப்படங்கள்

ம. ரேவன்

ம. ரேவன்