It is located on the canal bank in a private coconut grove at Govindampatti near Anumanthampatti.
worship
4 feet height, 3 feet wide
Village Name
Govindanpatty
District
Theni
கதை
முன்னொரு காலத்தில் இவ்வூரில் பெரிய தருமர் மற்றும் சின்ன தருமர் என்ற இரு சகோதரர்களும், அன்னம்மாள் என்ற அவர்களின் ஒரே சகோதரியும் வாழ்ந்துள்ளனர். சகோதரி அன்னம்மாள் வேறு சமூகத்தைச் சேர்ந்த ஒருவனை காதலித்து திருமணம் செய்துகொண்டு ஊரை விட்டுச் சென்றுவிட்டார். இந்த செய்தியைக் கேட்ட பெரிய தருமரும் சின்ன தருமரும், தங்களுடைய தங்கையையும் தங்கைக் கணவரையும் கொலை செய்துவிட்டனர் என்ற கதை இந்நடுகல்லைப் பற்றி இப்பகுதி மக்களால் கூறப்படுகிறது.
காலம் / அரசன்
பொது ஆண்டு 17 -18 ஆம் நூற்றாண்டு.
கூடுதல் விவரங்கள்
அண்ணன்மார் நடுகல் என்றழைக்கப்படும் இந்நடுகல்லில் இருநபர்கள் நின்ற நிலையில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளனர். வலப்புறம் இருப்பவரின் வலக்கையில் கட்டாரி போன்ற ஆயுதமும் இடக்கையில் துப்பாக்கியும் காட்டப்பட்டுள்ளன. இடப்புறம் இருப்பவரின் இடக்கையில் வில்லும் வலக்கையில் வாளும் காட்டப்பட்டுள்ளன. இருவரும் முறுக்கு மீசையுடன், தலையில் கொண்டையுடன், இடையில் குறுவாளுடனும், கைவளை, கடகவளை, பெரிய முகப்புடன் கூடிய மாலை போன்ற ஆபரணங்களுடன் அழகாக வடிக்கப்பட்டுள்ளனர்.
Story
In ancient times, in this village lived two brothers named Periya Dharmar and Chinna Dharmar, and their only sister Annammal. Sister Annammal fell in love with a man from another community, married him, and left the village. Hearing this news, Periya Dharmar and Chinna Dharmar killed their sister and her husband. This story about this hero stone is told by the people of this region.
Period / King
Common Era 17th–18th century
Additional Information
On this hero stone, called Annamar Nadukal, two figures are carved in standing posture. The figure on the right side is shown with a dagger-like weapon in the right hand and a gun on the left side. The figure on the left side holds a bow in the left hand and a sword in the right hand. Both figures are depicted with twisted moustaches, hair knots, short swords at the waist, armlets, bracelets, and necklaces with large pendants, beautifully ornamented.